உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடுகள்
2024 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலை ஹென்லி கடவுச்சீட்டு இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு இண்டெக்ஸ் நிறுவனமானது கடந்த 19 ஆண்டுகளாக உலகின் சக்திவாய்ந்த கடவூச்சீட்டுக்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
பட்டியலின் கடவுச்சீட்டுக்கள் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என்பதை அடிப்படையாக கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகின் சக்தி வாய்ந்த கடவூச்சீட்டு
அதன்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஆறு நாடுகள் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
இந்த நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் மூலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்த முதலிடப் பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முதல் 10 தரவரிசைகள்
1. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் (194 இடங்கள்)
2. பின்லாந்து, தென் கொரியா, ஸ்வீடன் (193 இடங்கள்)
3. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து (192 இடங்கள்)
4. பெல்ஜியம், லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் (191 இடங்கள்)
5. கிரீஸ், மால்டா, சுவிட்சர்லாந்து (190 இடங்கள்)
6. அவுஸ்திரேலியா, செக்கியா, நியூசிலாந்து, போலந்து (189 இடங்கள்)
7. கனடா, ஹங்கேரி, அமெரிக்கா (188 இடங்கள்)
8. எஸ்டோனியா, லிதுவேனியா (187 இடங்கள்) 9. லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா (186 இடங்கள்)
10. ஐஸ்லாந்து (185 இடங்கள்)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |