அபிவிருத்தி செய்யப்படும் சிகிரியா! சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை
சிகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்பத் திட்டங்களை இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டு முடிவதற்குள் நிறைவு செய்வதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அண்மை நாட்களில் அதிகரித்து வரும் நிலையிலேயே, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தை எளிதாக்குவதற்காக நிதி அமைச்சு குழுவொன்றையும் நியமித்துள்ளது.
அபிவிருத்தி திட்டம்
சிகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |