பாகிஸ்தானில் சிங்கள இளைஞன் கொல்லப்பட்ட விவகாரம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஆபத்து?
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மதநிந்தனை குற்றச்சாட்டில் சிறிலங்காவை சேர்ந்த பிரியந்த தியவதன என்ற சிங்கள பிரஜை இன்று கொடுரமாக தாக்கப்பட்டு பகிரங்கமாக எரித்துக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சநிலை எழுந்துள்ளது.
விளையாட்டு உபகரண தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் இவர் மீது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதான குற்றச்சாட்டில் அதே தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் கும்பல் ஒன்று அடித்துக்கொiலை செய்துவிட்டு தாக்குதலை நடத்தி அவரது உடலைப் பகிரங்கமாக எரித்த காட்சிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் தீவிரமாக பரவிவருகிறது.
மத வன்முறையை கைகளில் எடுத்து அரசியல் செய்யக் காத்திருக்கின்ற கூட்டம் இந்த விடயத்தை இலங்கையில் பெரிதுபடுத்தும் ஆபத்து இருப்பதால், அரசாங்கம் மற்றும் இன மதத் தலைவர்கள் முன்கூட்டியே இந்த விடயத்தில் மிகுந்த கரிசனை எடுக்கவேண்டும் என்று மக்கள் கருதுகின்றார்கள்
