முழுமையான பயணத் தடைகளை அகற்றும் சிங்கப்பூர்
கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடைகளை தளர்த்த சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரசுடன் வாழவும், நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லவும் காலம் வந்துள்ளதால், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் அறிவித்தள்ளார்.
சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்ட நபர்களுக்கு தனிமைப்படுத்தல் இன்றி சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கொரிய பிரஜைகளுக்கு இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது. எனினும் இலங்கை, இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளுக்கு சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுமா என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.