மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள்

Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack Suresh Salley
By Dharu Sep 23, 2026 12:14 AM GMT
Report

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கணினி உபகரணங்களுக்கான கடவுச்சொற்களை வழங்கத் தவறியமை தொடர்பில் நேற்று நீதிமன்றில் நீண்ட விவாதம் இடம்பெற்றது.

சலே முதலில் பயன்படுத்திய மடிக்கணினி தனது மகளுக்குச் சொந்தமானது எனக் கூறி, அதன் கடவுச்சொல்லை வழங்க மறுத்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

பின்னர் தொடர்ந்தும் கடவுச்சொல்லை வழங்காமல் தவிர்த்து வந்ததாகவும் மேலும் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திட்டமிட்ட சதி! சலே தொடர்பில் அம்பலமான அறிக்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திட்டமிட்ட சதி! சலே தொடர்பில் அம்பலமான அறிக்கை

சலேவுக்கு மறந்துபோன விடயம்

இதன்படி சலேவின் பதில்கள் மற்றும் அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த மடிக்கணினி உடனடியாக பொறுப்பேற்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள் | Barrage Of Questions Posed To Saleh S Side Court

இதற்கு பதிலளித்த சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்து பெர்னாண்டோ,

புலனாய்வு அதிகாரியாக இருந்த சலே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடவுச்சொற்களை மாற்றும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

இதனால் ஒரு வாரத்திற்கு முன்னர் பயன்படுத்திய கடவுச்சொல் கூட அவருக்கு நினைவில் இல்லாமல் இருக்கலாம் எனவும், பல மாதங்களுக்கு முன்னர் பயன்படுத்திய கடவுச்சொற்கள் நினைவில் இல்லாதிருப்பது அசாதாரணமான விடயம் அல்ல எனவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், சலே தற்போது கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறினார்.

வழங்கப்பட்டது தண்டணை ! ஈஸ்டர் குற்றவாளிகள் 15 பேருக்கும் 200 ஆண்டுகள் மேற்பட்ட சிறை

வழங்கப்பட்டது தண்டணை ! ஈஸ்டர் குற்றவாளிகள் 15 பேருக்கும் 200 ஆண்டுகள் மேற்பட்ட சிறை

கடவுச்சொல்லை வழங்காவிட்டால்

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த ஒருவருக்கு நினைவாற்றல் முக்கியமானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், சலே கடவுச்சொல்லை வழங்காவிட்டால், அதனைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டரீதியான வாய்ப்புகள் அரச தரப்புக்கு உள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள் | Barrage Of Questions Posed To Saleh S Side Court

இதனிடையே, சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

அவருக்கு அண்மையில் இதயத்தில் மருத்துவ சாதனம் பொருத்தும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக சுமார் 40 இலட்சம் ரூபாய் அரச நிதி செலவிடப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சலே தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து

ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து

ஊடகவியலாளர்களிடம் விசாரணை

மேலும், தற்போது அவரது பற்கள் தொடர்பான பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பல் பிரச்சினை அவரது இதய நிலைமையுடன் தொடர்புடையது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் சலேவுக்கு விசேட சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அரச தரப்பு குற்றஞ்சாட்டியது.

எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர், சலேயை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துச் சென்று வழக்கமான விசாரணைகள் மற்றும் கேள்விகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அரச தரப்பு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்காலத்தில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச தரப்பு தெரிவித்தது.

இந்த விடயம் தொடர்பில் தகவல்கள் அறிந்துள்ள ஊடகவியலாளர்களிடமிருந்தும் தேவையான தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அரச தரப்பு நீதிமன்றத்தில் மேலும் குறிப்பிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026