வழங்கப்பட்டது தண்டணை ! ஈஸ்டர் குற்றவாளிகள் 15 பேருக்கும் 200 ஆண்டுகள் மேற்பட்ட சிறை
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 15 பேருக்கும் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு தலா 200 ஆண்டுகளுக்கு மேலான கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும், தண்டனை பெற்ற நபர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, அவர்களுக்கான தண்டனைக் காலம் தொடங்கும் நாளிலிருந்து பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது குற்றவாளிகள் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல சிறைச்சாலை பேருந்துகள் தயாராக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேரைக் குற்றவாளிகள் என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டன.
23,270 குற்றச்சாட்டுகள்
அதேவேளையில் ஒன்பது பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி பிரதிவாதிகளுக்கு எதிராக, கொலை, பயங்கரவாதச் சதி மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார்.

2019 ஏப்ரல் 21 அன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மராசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேர்
முதலாவது பிரதிவாதி – மொஹமட் நௌஃபர் மௌலவி - 220 ஆண்டுகள்
இரண்டாவது பிரதிவாதி – மொஹமட் சரீஃப் ஆதம் லெப்பை (கபூர் மாமா) - 240 ஆண்டுகள்
மூன்றாவது பிரதிவாதி – ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் - 240 ஆண்டுகள்
நான்காவது பிரதிவாதி – மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா - 240 ஆண்டுகள்
ஐந்தாவது பிரதிவாதி – மொஹமட் இப்ராஹிம் சாஹித் அப்துல் ஹக் - 240 ஆண்டுகள்
ஆறாவது பிரதிவாதி – மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் - 200 ஆண்டுகள்
ஏழாவது பிரதிவாதி – மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன் - 200 ஆண்டுகள்
எட்டாவது பிரதிவாதி – அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ் - 260 ஆண்டுகள்
ஒன்பதாவது பிரதிவாதி – மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் - 220 ஆண்டுகள்
பத்தாவது பிரதிவாதி – அப்துல் லதீஃப் மொஹமட் சாஃபி (16ஆவது குற்றச்சாட்டைத் தவிர) - 220 ஆண்டுகள்
பதினொன்றாவது பிரதிவாதி – ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர் - 200 ஆண்டுகள்
பதினைந்தாவது பிரதிவாதி – மொஹமட் ஹனீஃபா ஸெய்னுல் ஆப்தீன் - 200 ஆண்டுகள்
பதினாறாவது பிரதிவாதி – மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ் - 220 ஆண்டுகள்
பதினெட்டாவது பிரதிவாதி – ராசிக் ரஸா ஹுசைன் - 220 ஆண்டுகள்
பத்தொன்பதாவது பிரதிவாதி – கச்சி மொஹமட் மொஹமட் ஜெம்சித் 200 ஆண்டுகள் சிறை
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |