இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம்

Sri Lanka Easter Attack Sri Lanka
By Dharu Sep 22, 2026 05:40 PM GMT
Report

நீண்டகாலமாக பேசுபொருளாகவும் பல்வேறு விவாதங்களுக்கு காரணமாகவும் இருந்து வந்த ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதாக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளை, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மேலும் 9 பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்ய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரதிவாதிகளுக்கான தண்டனையை நிர்ணயிப்பதற்காக வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : இன்றிரவு வரப்போகும் தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : இன்றிரவு வரப்போகும் தீர்ப்பு

23,270 குற்றச்சாட்டுகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை, நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

ஈஸ்டர் ஞாயிறன்று பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டமை மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்

முதலாவது பிரதிவாதி – மொஹமட் நௌஃபர் மௌலவி

இரண்டாவது பிரதிவாதி – மொஹமட் சரீஃப் ஆதம் லெப்பை (கபூர் மாமா)

மூன்றாவது பிரதிவாதி – ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான்

நான்காவது பிரதிவாதி – மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா

ஐந்தாவது பிரதிவாதி – மொஹமட் இப்ராஹிம் சாஹித் அப்துல் ஹக்

ஆறாவது பிரதிவாதி – மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்

ஏழாவது பிரதிவாதி – மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன்

எட்டாவது பிரதிவாதி – அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ்

ஒன்பதாவது பிரதிவாதி – மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்

பத்தாவது பிரதிவாதி – அப்துல் லதீஃப் மொஹமட் சாஃபி (16ஆவது குற்றச்சாட்டைத் தவிர)

பதினொன்றாவது பிரதிவாதி – ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர்

பதினைந்தாவது பிரதிவாதி – மொஹமட் ஹனீஃபா ஸெய்னுல் ஆப்தீன்

பதினாறாவது பிரதிவாதி – மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ்

பதினெட்டாவது பிரதிவாதி – ராசிக் ரஸா ஹுசைன்

பத்தொன்பதாவது பிரதிவாதி – கச்சி மொஹமட் மொஹமட் ஜெம்சித்

ஈஸ்டர் பிரதான வழக்கில் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டவர்கள்

பன்னிரண்டாவது பிரதிவாதி – மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன்

பதின்மூன்றாவது பிரதிவாதி – மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப்

பதினான்காவது பிரதிவாதி – ரஷீட் மொஹமட் இப்ராஹிம்

இருபதாவது பிரதிவாதி – ஸெய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜசீம்

இருபத்தொன்றாவது பிரதிவாதி – மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான்

இருபத்திரண்டாவது பிரதிவாதி – மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி

இருபத்துமூன்றாவது பிரதிவாதி – மொஹமட் அமீர் மொஹமட் அயதுல்லா

இருபத்துநான்காவது பிரதிவாதி – மொஹமட் அன்சார்தீன் மொஹமட் இல்மி எனப்படும் இல்மி

இருபத்தைந்தாவது பிரதிவாதி – மொஹமட் அக்ரம் அஹக்காம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திட்டமிட்ட சதி! சலே தொடர்பில் அம்பலமான அறிக்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திட்டமிட்ட சதி! சலே தொடர்பில் அம்பலமான அறிக்கை

இரண்டரை ஆண்டுகளாக விசாரணை

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான குற்றப்பத்திரிகை குற்றச்சாட்டுகளின் கீழ், 2021 ஆகஸ்ட் 10ஆம் திகதி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, சுமார் இரண்டரை ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட இந்த நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 250க்கும் அதிகமான வழக்கு விசாரணை அமர்வுகள் நடைபெற்றன.

வழக்குத் தொடுநர் தரப்பின் 2,309 சாட்சிகளில் 547 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், 2,076 ஆவணங்கள் மற்றும் வழக்குப் பொருட்கள் சான்றாக குறிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 2026 ஆகஸ்ட் 13ஆம் திகதி வழக்குத் தொடுநர் தரப்பின் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. அதன் பின்னர், ஒகஸ்ட் 24ஆம் திகதி நீதிபதிகள் குழாம், செப்டம்பர் 22ஆம் திகதி வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

விசாரணையின்போது பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள்

வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் கூண்டில் இருந்து வாக்குமூலம் அளித்த பிரதான குற்றஞ்சாட்டப்பட்ட நௌஃபர் மௌலவி, தாம் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினருடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும், ஆனால் தாக்குதல்களை நடத்துமாறு எந்தவித அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மற்றொரு பிரதிவாதியான ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹானும், மொஹமட் ஹனீஃபா ஸெய்னுல் ஆப்தீனும், தங்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுத்து, சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களில் தங்களிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும், தாங்கள் மத போதனைகளில் மட்டுமே பங்கேற்றதாகவும் தெரிவித்திருந்தனர்

கட்டுவாப்பிட்டி, கொச்சிக்கடை மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கையில் முதன்முறையாக ‘யூரியா நைட்ரேட்’ எனப்படும் சக்திவாய்ந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜமைக்காவிலிருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளித்த முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். டி. சன்ன பெரேரா, ஷங்க்ரி-லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் குண்டுவெடிப்பை நடத்தியவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை உறுதிப்படுத்தினார்.

வழக்கு ஆரம்பிக்கப்பட்டது முதல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணிகள் சுரேன் டி. பெரேரா, மனுஷிகா குரே, ஹிருணி பெரேரா, சித்திஜா ஜயமான்ன கன்னியாஸ்திரி மற்றும் சுமிரி என். பெர்னாண்டோ உள்ளிட்டோர் முன்னிலையாகி இருந்தனர்.

சதி தொடர்பான புதிய விசாரணை

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் பிரதான சூத்திரதாரி மற்றும் சதி தொடர்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு உரிய வழக்கும் அன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

பிரிட்டனின் ‘சனல் 4’ தொலைக்காட்சியில் வெளியான தகவல்களின் பின்னர், மருதானை சமூக மற்றும் சமய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரோஹன் சில்வா அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணையை ஆரம்பித்திருந்தது.

இந்த விசாரணையுடன் தொடர்புடையதாக, அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே, 2026 பெப்ரவரி 25ஆம் திகதி பேலியகொடையில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கேணல் மொஹமட் அன்சார் மற்றும் பிரேம் ஆனந்த உதலகம ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை கிடைக்கப்போகும் இந்ந நாள்...

269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை கிடைக்கப்போகும் இந்ந நாள்...

தீர்ப்பை அறிவித்து உரையாற்றிய தலைமை நீதிபதி

மிகப்பெரிய தீர்ப்பின் மிக முக்கியமான அம்சங்கள் மட்டுமே திறந்த நீதிமன்றத்தில் அறிவிக்கப்படுவதாகத் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

பிரதிவாதிகளுக்கு எதிராக 8,900 பக்கங்களைக் கொண்ட 9 தொகுதிகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை, உடந்தையாக இருந்தமை, தீவிரவாதக் கருத்துகள் மற்றும் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளைப் பரப்பியமை தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகப் பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.

அதன்படி, இத்தாக்குதலுக்கு முன்னர் தீவிரவாத சொற்பொழிவுகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகளுக்கான பட்டறைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்களைப் பராமரித்தமை தொடர்பாகப் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

அப்போது தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க திறந்த நீதிமன்றத்தில் பின்வருமாறு தெரிவித்தார்:

"சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே இடத்தில் வரிசையாக நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை. சதித்திட்டம், உடன்பாடு என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். ஆரம்பத்தில் தொடர்பில் இருந்தவர்கள், இடையில் இணைந்தவர்கள் மற்றும் இறுதியில் இணைந்தவர்கள் அனைவரும் சதித்திட்டத்தின் பங்காளிகளே ஆவர்."

தொடர்ந்து, ஒவ்வொரு பிரதிவாதியும் முன்வைத்த தற்காப்பு வாதங்களை நீதிமன்றம் பரிசீலித்ததாக நீதிபதி தெரிவித்தார்.

அதில், முதலாவது பிரதிவாதியான மொஹம்மது இப்ராஹிம் மொஹம்மது நௌஃபர் என்ற நௌஃபர் மௌலவி, 2வது பிரதிவாதியான கபூர் மாமா, 3வது பிரதிவாதியான ஹயாத்து மொஹம்மது மில்ஹான், 4வது பிரதிவாதியான மொஹம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, 5வது பிரதிவாதியான மொஹம்மது இப்ராஹிம் சாஹித் அப்துல்லா உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

இருப்பினும், ஏனைய 9 பிரதிவாதிகள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக மேல்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார். அதன்படி, தனது இறுதி முடிவை அறிவித்த மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தின் தலைமை நீதிபதி பின்வருமாறு தெரிவித்தார்:

"அனைத்து சாட்சியங்களையும் பரிசீலித்த பின்னர், மூன்று நீதிபதிகளும் ஏகமனதாக இந்த முடிவுக்கு வந்துள்ளோம். அதன்படி, இவ்வழக்கின் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 15, 16, 17 மற்றும் 18 ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழாம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

இருப்பினும், 12, 13, 14, 20, 21, 22, 23, 24 மற்றும் 25 ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியதால், அவர்களை விடுவிக்கத் தீர்மானிக்கப்படுகிறது."

அதன்படி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கான தண்டனை விபரங்களை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்றம் தற்போது அறிவித்து வருகின்றது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்