கொழும்பு - சிங்கப்பூர் இடையான விமான சேவைகள் அதிகரிப்பு : வெளியான தகவல்
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம் இலங்கையின் - கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே 3 பகல் நேர விமான சேவைகளை நேற்று (2026.01.06) முதல் ஆரம்பித்துள்ளது.
இந்த முயற்சியானது இலங்கைக்கும் விமான நிறுவனத்தின் உலகளாவிய வலையமைப்பிற்கும் இடையிலான தொடர்பை மேலும் விரிவுபடுத்தச் செய்கிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய பகல் நேர சேவையானது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் இடம்பெறும் எனவும் இது ஏற்கனவே உள்ள விமானப் பயண கால அட்டவணையை வலுப்படுத்துவதுடன், இரு நகரங்களுக்கும் இடையே பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக நெகிழ்வுத் தன்மையையும், பயணத் தெரிவுகளையும் வழங்குகிறது.
புதிய விமான சேவைகள்
இந்த புதிய சேவைகளின் மூலம், கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையிலான சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைகள், வாரத்திற்கு பத்து (10) விமானங்களாக அதிகரிக்கும்.

இந்த விமான பயணங்கள் Airbus, A350 மற்றும் Boeing 787-10 Dreamliner போன்ற சிங்கப்பூர் எயார்லைன்ஸின் அதிநவீன விமானங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும்.
இந்த புதிய சேவையில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள், விருது பெற்ற உயர்தர சேவையையும் மேம்பட்ட விமான பொழுதுபோக்கு அம்சங்களையும் எவ்வித இடையூறுகளுமின்றி அனுபவிக்க முடியும்.
சுற்றுலா துறைக்கு பங்களிப்பு
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பகல் நேர விமான நேர அட்டவணையானது, சிங்கப்பூர் சாங்கி (Changi) விமான நிலையத்தின் ஊடாக, சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விரிவான வழித்தடங்களில் உள்ள முக்கிய இடங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கான மேம்பட்ட இணைப்பை ஏற்படுத்தும் வசதிகளும் உள்ளடங்கும்.
இது வணிகம் மற்றும் சுற்றுலாப் பயணங்கள் ஆகிய இரண்டிற்கும் பெரும் ஆதரவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 9 மணி நேரம் முன்