சைவ வழிபாடு முறைகளை திரிபுபடுத்தும் சிங்கள திரைப்படம்: ரணில் எடுத்த முடிவு
சைவ மக்களின் வழிபாடு முறைகளை திரிபுபடுத்தும் வகையில் ‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்கள திரைப்படம் அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முறைபாடு அளித்ததை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் தலைமையில் நேற்றைய தினம்(08) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்கள மொழி திரைப்படத்தில், முருகப் பெருமானை அண்ணனாகவும் பிள்ளையாரை தம்பியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இது சைவ மக்களின் வழிபாடு முறைகளை திரிவுபடுத்தும் வகையில் உள்ளதோடு அவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.
அத்துடன், அந்த திரைப்படத்தில் முருகப்பெருமானின் காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நபருக்கு நெற்றிப்பொட்டுக்கு பதிலாக நாமம் பூசப்பட்டுள்ளது.
சைவர்களின் வரலாற்றை திரிபுப்படுத்தும் இந்த திரைப்படத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையிலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |