சிங்கள குடியேற்றத்தினை ஒன்றிணைந்து எதிர்க்க இன்று பேச்சு
vavuniya
sinhala
immigration
By Vanan
வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளுக்கிடையிலான கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
தமிழரசுக்கட்சி வவுனியா கிளையின் அமைப்பாளர் நடராஜா கருணாநிதியின் ஏற்பாட்டில் நகரசபை மண்டபத்தில் மாலை 4 மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக் கூட்டத்திற்கு ஈ பி டி பி தவிர்ந்த அனைத்து தமிழ்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அமைப்பாளர் ந. கருணாநிதி தெரிவித்தார்.
சிங்கள குடியேற்றத்தினை ஒன்றிணைந்து எதிர்க்கும் பொறிமுறையை உருவாக்கும் பொருட்டே குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.