பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு! சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடவடிக்கை
இலங்கையில் தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கமைய காவல்துறையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட சுமார் 15 ஆயிரம் பேர் நாட்டின் பல பகுதிகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் உள்ளிட்ட நான்காயிரத்து 500 கொண்டாட்ட நிழகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிக அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்துவதன் மூலம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய, 14 ஆயிரம் காவல்துறையினர், 500 கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் 400 இராணுவத்தினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |