ஒருநாளும் இந்தக் காடையர்கள் மாறப்போவதில்லை
இந்த நாடு 2048 அல்ல 200048 ஆனாலும் மாறப்போவதில்லை.
இது சிங்கள பௌத்த நாடு என்பதும் அதில் சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றதுமான மகாவம்ச மனோநிலையில் துமி அளவும் கூட மாற்றமில்லை.
கடந்த ஆண்டு அரிசிக்காகவும் பருப்புக்காகவும் போராடிய சிங்களவர்கள் இன சமத்துவத்தை பேசினார்கள். இழிச்சவாய் தமிழர்களும் நல்லிணக்கம் என்று கடைப்பிடித்தார்கள்.
கடந்த காலங்களை மறந்து ஒரு தாய் மக்களாய் ஒன்றாய் வாழ்வோம் ஒரே பாசமழை ஆனால், நக்கிப்பழகிப்போன நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்பது போல அவர்கள் அரிசி பருப்பு அங்கர் பிரச்சினை முடிந்தது தான் தாமதம்.
“தமிழர்களை அடித்துக்கொல்லுங்கள் “ இது கோசமாக வலுப்பெற்றது.
83 களில் கொழும்பு வீதிகளில் எங்களை கொன்று தார்ப்பீப்பாயில் போட்ட அதே குரல்,
56 ,57 களில் பற தெமலு அப்பட எப்பா என்று கத்திய அதே குரல்,
முள்ளிவாய்க்காலி்ல் எங்கள் பிஞ்சுகளை நஞ்சுக் குண்டு போட்டு கொன்று கூவிய குரல்,
வெள்ளை வான் கடத்தல்களிலும் இராணுவ சுற்றிவளைப்புகளிலும் அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்ட போதும் கேட்ட அதே குரல்,
வீரமுனையில் இருந்து வல்வெட்டித்துறை வரை கிராமம் கிராமமாக எங்கள் ஊர்களில் நிகழ்த்திய படுகொலைகளில் கேட்ட அதே குரல்,
சில நாட்களின் முன் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில் மேய்ச்சல் தரைகளை அடாத்தாய் பிடித்து வைத்திருந்த சிங்களவர்களிடம் கேட்டது.
சரி போகட்டும் என்று விட இன்று தமிழீழத் தலைநகரில் வந்தேறிய குடிகளாய் அட்டகாசம் புரியும் சிங்கள காடையர் கூட்டம்,
தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தியை உடைக்கும் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனை தேடித்தேடி அடிக்கும்போதும் கேட்டது.
இனிமேலும் இந்த சிங்களத்துவேசமும் மகாவம்ச மனோநிலையும் மாறுமா
நடுவீட்டில் குளிப்பாட்டி படுக்க வைத்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாதல்லவா - அதுபோல தான் இதுவும்
ஒருநாளும் இந்தக் காடையர்கள் மாறப்போவதும் இல்லை இங்கு எந்த மாற்றம் நிகழப்போவதுமில்லை.