மீண்டும் இலக்காகும் தமிழர்கள்! சிங்கள கடும்போக்காளர்கள் புதிய நகர்வு
Sri Lankan Tamils
Mullaitivu
Buddhism
By Vanan
இலங்கையில் சிங்கள கடும்போக்காளர்கள் புதிய விடயம் ஒன்றைக் கொண்டுவந்து தீ வைக்கப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக தெரிவித்தார்.
பொலன்னறுவ - கருதுவெல பகுதியில் நேற்று(30) இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீண்டும் தமிழர் விவகாரம்
அவர் மேலும் உரையாற்றுகையில், தற்போது முஸ்லிம் மக்களுடன் பிரச்சினை இல்லை. மீண்டும் தமிழர்கள் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளனர்.
குருந்தூர் விகாரையை மையமாக வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லம் முற்றுகையிடப்பட்டது.
சிங்கள கடும்போக்காளர்கள் புதிய விடயத்தைக் கொண்டுவந்து தீ வைக்கப் போகிறார்கள். ஆனால், தீ பற்றப்போவதில்லை.
நனைந்துள்ள தீப்பெட்டிக்கு தீ வைக்கப்போகிறார்கள். முன்னரைப்போன்று பற்றுவதில்லை.
தமிழ் மக்கள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கிறார்கள்” என்றார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்