வயிற்றில் அடிக்கிறது சிறிலங்கா இராணுவம் - கண்ணீர் சிந்தும் ஈழத்தாய்
சிறிலங்காவை பொறுத்தவரை ஈழத்தமிழர்களின் இருப்பின் மீதான கேள்வி காலத்திற்கு காலம் எழுந்துவரும் நிலையில், மிக அண்மைக்காலமாக புதிய ஆக்கிரமிப்பு வடிவில் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற செயற்பாடு இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சிறிலங்காவின் சிங்கள அரசும் அதன் பௌத்த தொல்லியல்துறையும் இணைந்து நடாத்திவரும் ஆக்கிரமிப்பிற்கு அப்பால் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்தும் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்து அங்கு பௌத்த வழிபாட்டிடங்களை அமைத்தல் மற்றும் விவசாய செய்கை மூலமாக மக்கள் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.
காலத்தின் போக்கில் வலிகளோடு வாழும் ஈழத்தமிழினம். இன்னமின்னமும் வலிகளை சுமக்கின்ற நிலைக்கு எமது அரசியல் தலைமைகளும் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மையையும் பதிவு செய்கிறது ஐபிசி தமிழ்.
வலி - வடக்கு மற்றும் தமிழர் நிலங்களின் மீதான சிங்கள ஆக்கிரமிப்புகள் மற்றம் தமிழர்களின் வாழ்வாதார பறிப்புகள் தொடர்பான கடந்தகால மற்றும் சமகால நிலவரங்களை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் தலைவர் சஜீவன் சண்முகலிங்கம் இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்.
பகுதி - 1
பகுதி - 2
