சீனாவிலிருந்து மேலும் பத்து லட்சம் தடுப்பூசிகளை பெறவுள்ளதாக தகவல்
colombo
china
covidvaccine
sinopharm
By Sumithiran
சீனாவில் இருந்து இன்று (06) பத்து இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசி மருந்துகள் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்கள், மாகாண சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் இன்று நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலில் அவர் புள்ளி விபரங்களை வெளியிட்டதுடன், எதிர்வரும் புதன்கிழமை மேலும் பத்து இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
அடுத்தடுத்த நாட்களில் பல மாவட்டங்களில் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் அமுலாகும். இதற்காக, நுவரெலியா, பதுளை, கேகாலை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு தலா ஐம்பதாயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
மாத்தளை, குருணாகல் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்பட இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்