சினோஃபார்ம் தடுப்பூசியில் பக்கவிளைவுகள்? இராஜாங்க அமைச்சர் கொடுத்த விளக்கம்
சீன தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட எவருக்கும் இதுவரை எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என மருந்து உற்பத்தி, விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நேற்றுவரை நாட்டில் 71,203 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்ட எவருக்கும் எந்த வித பக்கவிளைவுகள் தொடர்பிலும் தகவல்கள் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்புக்கான முதலாவது தடுப்பூசி 1,007,783 நபர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,
நேற்று முன்தினம் மாத்திரம் 65,803 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். .
அதற்கிணங்க 50,493 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி, 5460 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி நேற்று முன்தினம் வழங்கப்பட்டதுடன் மேலும் 9 ஆயிரத்து 850 பேருக்கு இரண்டாவது தடவையாக வழங்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
.
அதற்கிணங்க நாட்டில் சீன பிரஜைகள் 2435 பேர் மற்றும் நாட்டு மக்கள் 221,368 பேருக்கும் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.