முன்னாள் அமைச்சருக்கெதிராக களமிறங்கிய அவரது சகோதரி
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனத்தின் மூலம் உண்மையான சொத்துக்கள் மற்றும் கடன்களை முன்வைக்கவில்லை என அவரது இளைய தங்கை தெரிவித்துள்ளார்.
2010 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விதுர விக்கிரமநாயக்க பெற்ற வரியில்லா வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்து பெறப்பட்ட பணச் சொத்துக்கள் பிரகடனத்தில் காட்டப்படவில்லை எனவும், அனுமதிப்பத்திரம் விற்கப்படாவிட்டால், இரண்டு வாகனங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட வேண்டும் எனவும் அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் வெளிப்படைத் தன்மையுடன் பணிபுரிந்தால், சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிப்பது மட்டுமல்லாமல், அவற்றைத் தணிக்கை செய்வதற்கும் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் கூறினார்.
