காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்!

Northern Provincial Council Northern Province of Sri Lanka
By Independent Writer Nov 30, 2025 12:04 PM GMT
Independent Writer

Independent Writer

in இயற்கை
Report

குறிகாட்டுவான் இறங்குதுறை

குறிகாட்டுவான் இறங்குதுறை தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு நாடா ளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் சென்று பார்வையிட்டிருந்தார்.

அத்தோடு நயினாதீவுக்கு வாகனங்களை ஏற்றிச்செல்லும் புதிய பாதைக்கான கட்டுமானப்பொருட்கள் இன்றையதினம் குறிகாட்டுவானிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மன்னாரில் மீட்பு பணி

மன்னாரில் டிட்வா புயலினால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் ஆங்காங்கே மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக மன்னார் பிராதான பாலம் மற்றும் கோந்தை பிட்டி கடற்கரை பகுதிகளில் தரித்து வைக்கப்பட்ட ரோலர் படகுகள் நீரில் மூழ்கின இந்த பின்னனியில் குறித்த படகுகளை மீட்கும் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மற்றும் ரோலர் உரிமையாளர்கள் இணைந்து மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் இதுவரை படகுகளை மீட்கமுடியாத நிலையே காணப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்! | Situation In The North Due To Climate Change

செய்தி - நயன்

வத்திராயன்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வத்திராயனில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

கிணறுகளிலும் நீர் நிரம்பி வழிவதால் அப்பகுதி மற்றும் ஏனைய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி - எரிமலை

 ரி.என்.சூரியராஜா

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9154  குடும்பங்களை சேர்ந்த 29 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா  தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் உயிரிழந்ததோடு இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

செய்தி - கஜி

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாகவும்,ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வும் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

நானாட்டான்,மடு,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடு மற்றும் மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்! | Situation In The North Due To Climate Change

குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்! | Situation In The North Due To Climate Change

எனினும் அவர்களினால் இயன்ற அளவிற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால் நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர். 

செய்தி - நயன் 

வடமராட்சி கிழக்கு 

வடமராட்சி கிழக்கு பகுதியில் இறந்த நிலையில் கால்நடைகள்! நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்! | Situation In The North Due To Climate Change

அந்த வகையில் யாழ். வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து இருப்பதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி - கஜி

கட்டைக்காட்டு பகுதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்! | Situation In The North Due To Climate Change

குறித்த பகுதியில் கடும் காற்றுடன் மழை தொடர்ந்து பெய்துவருவதால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்பகுதி கிராம அலுவலர் பார்வையிட்டு வருகின்றார் .

செய்தி - எரிமலை

மருதங்கேணி 

சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரழந்துள்ளார்.

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்! | Situation In The North Due To Climate Change

நேற்று மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்காக சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 

செய்தி - கஜி

கொடுக்குளாய் 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் பகுதியில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

கடற்றொழிலாளர்  தமது படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். பலத்த காற்று வீசியதால் நிழற்குடை ஒன்றின் கூரையும் சேதமடைந்துள்ளது.

செய்தி - எரிமலை

இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்! | Situation In The North Due To Climate Change

அந்தவகையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.

அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

அங்கு தங்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், குழந்தைகள் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட அவசர நிவாரணக் பொருட்கள் அமைச்சரின் ஏற்பாட்டினால் வழங்கப்பட்டன.

செய்தி - தீபன்

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026