தமிழரசுக் கட்சிக்குள் same side goal அடிக்கும் செயல்பாடு இல்லாத வரலாற்றினூடாக வந்தவன் நான்- சிறீதரனுக்கு பதிலடி!

jaffna press meet cvk sivagnanam s.shritharan
By Kalaimathy Sep 08, 2021 07:07 AM GMT
Report

தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது நடப்பது போல தன்பக்க கோல் (same side goal) அடிக்கும் செயல்பாடு இல்லாத வரலாற்றினூடாக வந்தவன் நான் என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கருத்திற்கு தெளிவுபடுத்தல் வழங்கும் முகமாக நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்ல தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கடந்த 05.09.2021 ஆம் திகதி ஒளிபரப்பாகிய spotlight நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறிதரன், நிறைய அனுபவம் வாய்ந்த நானும் வடமாகாண சபையை குழப்புவதில், பாரிய கவனம் செலுத்தினேன் என்று குற்றம் சாட்டியிருந்தார். இக்கருத்து சில அச்சு ஊடகங்களிலும் செய்தியாக்கப்பட்டதால் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துவது மிக அவசியம் என்பதால் இந்த ஊடக சந்திப்பை கூட்டியிருக்கின்றேன்.

நான் செய்த தவறாக அவர் குறிப்பிட்டது 17 சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மாகாண சபையை கலையுங்கள் என்ற கடிதத்தை ஆளுநரிடம் நான் கையளித்தமை பற்றியது. இந்த விடயம் தொடர்பாக பல தெளிவுபடுத்தல்களை நான் கடந்த 5 வருடங்களாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

ஆளுநருக்குக் கொடுத்த கடிதம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்பது மட்டுமே தவிர. சபையைக் கலையுங்கள் என்றல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன். முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக் குழு ஒன்றை சபை நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் சமர்பித்த போது இதன் பொருட்டு சபை உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுவை நியமிக்க முடியுமே தவிர, முதலமைச்சர் கோரியபடி வெளியாட்கள் கொண்ட குழுவை நியமிப்பதை நிராகரித்ததே நான் தான்.

முதலமைச்சர் தமக்குரிய சிறப்புரிமைக்கமைய அமைச்சர்களை நீக்கும்படி ஆளுநருக்கு சிபார்சு செய்யலாம் என்பதால் விசாரணைக் குழு தேவையற்றது என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது. அதனால் சுமார் ஒன்றரை நாள் விவாதத்தின் பின்பு முதலமைச்சர் தாமே ஒரு குழுவை நியமிக்கலாம் என்று நாம் கூறியதற்கு அமையவே விசாரணைக் குழு அவரால் நியமிக்கப்பபட்டது.

அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கம் அளித்த நிலையில் முதலமைச்சர் அதனையும் பரிசீலித்து அவரது முடிவை இரண்டு நாட்களின் பின்பு தெரிவிக்கலாம் என்ற எனது கோரிக்கையை நிராகரித்து தமது தீர்மானித்தை வாசிக்கத் தொடங்கியதும் அநேகமான மாகாண சபை உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.

இவ்வாறான நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய நான் சபை அமர்வு முடிந்த பின்பு கட்சித் தலைமையத்துக்கு இரண்டு மணித்தியாலயங்களுக்கு பின்பு சென்றபொழுது அநேகமான உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆளுநருக்குச் சமர்ப்பிதற்கான கடிதம் கணினியில் தட்டச்சிடப்பட்டுக் கொண்டிருந்தது. அது கட்சி உறுப்பினர்களின் முடிவு என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் எனது பெயர் முதலில் இருந்தபோது அப்படிப் போட வேண்டாம். அது தவறு என பலமுறை வற்புறுத்தியும் அதனை நிராகரித்து எனது பெயரை முதலில் தட்டச்சாக்கிவிட்டார்கள்.

வேறு வழியின்றி கையொப்பமிட நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். இந்தக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவதற்கு என்னையும் அழைத்தார்கள். அப்படி நானும் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனும் எனது வாகனத்தில் புறப்படும் போது கமலேஸ்வவரன் அந்தக் கடிதக் கோவையை கொண்டு வந்து என்னிடம் தந்தார். அதை நான் ஏற்காமல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தவர்களே கொடுக்க வேண்டும் எனக் கூறியதும் அவர் அதை எடுத்துச் சென்றார்.

பின்பு ஆளுநரைச் சந்திக்க மேல்மாடியில் உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் சென்ற போது ஏற்பட்ட நெருக்கடிக்குள் அந்தக் கோவை எனது கையில் திணிக்கப்பட்டது. இதனால் நான் அதிர்ச்சியடைந்த போதும் அந்த இடத்தில் நின்று பிரச்சினைப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு கடிதம் என்னால் ஆளுநரிடம் சகல உறுப்பினர்கள் முன்னிலையில் கையளிக்க வேண்டியதாயிற்று.

எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முன்னெடுப்பிலோ வேறு விதத்திலோ எனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை காணலாம். சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம். தாம் இது பற்றி “கட்சித் தலைவர் மாவை அண்ணையைக் கேட்ட போது இதைப் பற்றி தன்னுடன் கதைக்கவில்லை” என தம்மிடம் கூறியதாக சிறிதரன் கூறுகின்றார்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது மாவை சேனாதிராசா தலைமையகத்திலே இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தக் கைங்கரியத்தை முன்னெடுத்தவர்கள் வேறு எங்கேயோ கூடித் தயாரித்த வரைபை அவரிடம் காட்டிய பின் மாற்றியமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆளுநர் அலுவலகத்தில் என்னைக் கடிதத்தைக் கொடுக்க வைத்த திட்டமிட்ட சதி பற்றியும் இதில் நான் பலிகடாவாக்கப்பட்டமை பற்றியும் உடனடியாகவே கட்சித் தலைவரான மாவை சேனாதிராசாவுக்கு நேரடியாக எனது கவலையைத் தெரிவித்த பின்பே நான் எனது இல்லம் திரும்பினேன்.

இதனை அவரிடமே ஊடகவியலாளர்கள் கேட்கலாம். அவரிடம் பேசிய பின்பே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை அழைத்தேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். ஆகவே, ஏதோ கட்சித் தலைவருக்குத் தெரியாமல் இந்தச் செயற்பாட்டை நான் முன்னெடுத்த மாதிரியான தொனிப்பபட  சிறிதரன் கூறிய கருத்து தவறானதும் கவலையளிப்பதாகும். இது ஒரு தனிமனிதன் கையாண்ட விடயமல்ல.

17 சபை உறுப்பினர்கள் சேர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட விடயமாகும். உண்மையை மறைக்க முடியாது. மாவை சேனாதிராசா அப்படி உண்மையை மறைக்கக்கூடியவர் அல்ல. நான் அவைத் தலைவர் மட்டும் தான் என்பதையும் நிர்வாக விடயத்தில் நேரடிப் பொறுப்பு எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதும் சாதாரண அறிவுக்கெட்டிய விடயம். மாகாண சபை நிர்வாகத்தை யார் யார் குழப்பினார்கள். எவற்றை எல்லாம் குழப்பினார்கள். அவற்றின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்ற நூற்றுக்கணக்கான விடயங்கள் எனக்குத் தெரியும்.

கட்சி நலன் கருதி நான் அவை பற்றி பொது வெளியில் பேசியதில்லை. அதனால் நான் பலவீனமானவன் எனறு யாரும் கருதக் கூடாது. இப்பொழுது நடப்பது போல தமிழரசுக் கட்சிக்குள் (same side goal) தன்பக்க கோல் அடிக்கும் செயல்பாடு இல்லாத வரலாற்றினூடாக வந்தவன் நான்.

"ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்கு பேருந்தகைத்து" என்றார் வள்ளுவர். தேவைப்படும் போது அவை பற்றி பேசுவேன். 50 வருடத்திற்கு மேலான அரசியல் மற்றும் மக்கள் சேவை அனுபவமும் 20 வருடத்துக்கு மேலான தேர்தல்களைச் சந்தித்த அனுபவமும் எனக்குண்டு என்பதை நான் கூறியாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.   

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி