தேர்தல் காலங்களில் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட பல கோடி ரூபாய்கள்- நிரூபிக்கத் தயார்; சிவாஜிலிங்கம் பகிரங்க சவால்!

jaffna sumanthiran TNA press meet sivajilingam
By Kalaimathy Sep 29, 2021 05:43 AM GMT
Report

தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் காலங்களில் பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் சுமந்திரனால் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதென தமிழ்த்தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்( mk shivajilingam ) தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிரவித்த அவர்,

என்னைப்பற்றி சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்ததை நான் அவதானித்தேன். வல்வெட்டித்துறை நகரசபை கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஐயாவை துரோகிகள் என்ற அர்த்தத்தில் நான் பேசியதாக சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.

நான் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை துரோகி என கூறவில்லை. எனது காணொளியை பார்த்தால் நன்கு தெரியும். நகரசபைத் தவிசாளரை தேர்ந்தெடுப்பதிலே அதிருப்தியுற்று சதீஸ் அந்தக் கூட்டத்தை பகிஷ்கரித்திருந்தார். ஆனால் சுமந்திரன்  கூறுகின்றார் சதீஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டாரென்று.

கூட்டத்தை பகிஷ்கரித்திருந்த சதீஸ் எவ்வாறு தவிசாளராக போட்டியிட்டிருப்பார். ஊடகப் பேச்சாளர் என்று கூறிக்கொண்டு தெரியாத விடயங்களைப் பற்றி சுமந்திரன் பேசக்கூடாது. தெரியாத விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் பதவியில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக செயல்ப்பட்டவரின் உறுப்புரிமை பறிக்கப்பட்டு தற்போது அங்கு ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது.

அப்படியானால் ஏன் சதீஷினுடைய உறுப்புரிமை பறிக்க முடியாமல் போனது. ஜனாதிபதி சட்டத்தரணியால் முடியாமல் போய்விட்டதா? உங்களுடைய கனிஷ்ட சட்டத்தரணிகள் சரியாக செய்யவில்லை என்றால் அதனை செய்விக்க வேண்டியது யார்? இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் இந்த வழக்கில் ஐந்து தடவைக்கு மேல் சுமந்திரன் முன்னிலையாகி 42 மாதங்கள் கடந்தும் இந்த வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

சதீஷ் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்ததாக சுமந்திரன் தெரிவித்திருந்தார். எனக்கென்னவோ சுமந்திரனுக்கு ரணிலுடன் பழைய நினைவுகள் வந்து விட்டது போல தான் தென்படுகிறது. சதீஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட கணேஸ்வரன் வேலாயுதத்தின் இணைப்புச் செயலாளராகவே சம்பளத்துக்கு பணிபுரிந்தார்.

நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு அனுப்பியதாக சுமந்திரன் கூறும் கடிதத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு எழுதிய கடிதம் என்பது வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தொடர்பாக உள்ள பிரச்சினைகளை பற்றியதாகும். அதில் நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை. நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் இல்லை ரெலோவிலும் இல்லை.

ஆனால் நான் ஏதோ கள்ள உறவு வைத்திருப்பது போல சித்தரிக்கின்றார். வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ்த் தேசியத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக நான் செயல்ப்பட்டேன். கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரையும் கூட்டிக்கொண்டு சுமந்திரன் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரை சந்தித்திருக்கிறார்.

நீங்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்கின்றீர்களா? யாழ் மாநகரசபையிலும் இதே வேலையை செய்தீர்கள். தவிசாளர் இல்லாதவிடத்து அடுத்த தவிசாளர் போட்டிக்கு உபதவிசாளரையே நியமித்திருக்க வேண்டுமென சுமந்திரன் கூறுகிறார். ஆனால் இதே விடயத்தை நல்லூர் பிரதேச சபையிலும் யாழ்ப்பாண மாநகர சபையிலும் அவர் செய்யவில்லையே? ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு சட்டத்தை சுமந்திரன் பயன்படுத்துகின்றரா?

நான் குருநாகலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டமை தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். நான் ஜனாதிபதி வேட்பாளராக குருநாகலில் போட்டியிட்டபோது சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி இருந்தேன். அதற்கு ஆதாரமாக வீக்கிலீக்ஸ் வெளியிட்ட பதிவுகள் இருக்கின்றன.

இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்த பற்றீசியா அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய செய்தி குறிப்பில் சர்வதேச விசாரணையை கோரும் ஒரே ஒரு தமிழன் சிவாஜிலிங்கம் தான் என கூறியிருந்தார்.

2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் சுமந்திரனால் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இது கட்சியின் நிர்வாக செலவுக்காக வழங்கப்பட்டதா அல்லது பிரச்சாரத்துக்காக வழங்கப்பட்டதா என்பது வழங்கியவருக்கு தான் தெரியும்.

ஆகவே பகிரங்கமாகவே சொல்கிறேன் பணம் வழங்கியது உண்மை முடிந்தால் வழக்கு போடுங்கள். இன்னும் பல விடயங்கள் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது அதனை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்துவேன். ஒட்டுக்குழுக்கள் என்று ரெலோவையும் புளொட்டையும் குற்றஞ்சாட்டுகிறார்.

ஆனால் அவர்களுடைய வாக்குகளையும் சேர்த்துத்தான் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார் என்பதை அவர் உணரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020