தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன்

Tamils Sri Lankan Peoples Pon Sivakumaran
By Theepachelvan Jun 06, 2024 01:29 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே.

அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன்.சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி.

தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. சிறிலங்கா அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன்.

தமிழ் இனத்திற்கும் மாணவ சமூகத்திற்கும் சிந்தனையை தூண்டுகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராளியான பொன். சிவகுமாரன் அவர்களின் 50ஆவது ஆண்டு வீரவணக்க தினம் இன்று உலகத் தமிழர்களால் நினைவுகொள்ளப்படுகிறது.

இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு

இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு

யார் இந்த சிவகுமாரன்?

சிறிலங்கா சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன். சிவகுாமரன் பிறந்தார்.

பொன்னுத்துரை, அன்னலட்சுமி இவரது பெற்றோர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் (Jaffna Hindu College ) உயர்தர மாணவனாக இவர் கல்வி பயின்றார். அக் காலத்தில் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது.

தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன் | Sivakumaran Who Fought The Liberation Of Tamils

இது சிவகுாமரனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாணவனாய் தன்னுடைய மாணவ சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டு தாம் ஒடுக்கப்பட்டபோது சிவகுமாரன் போராடத் துணிந்தார்.

கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் அவர் தன்னையும் இணைத்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தாக்குதலையும் பொன். சிவகுமாரனே நடத்தினார்.

கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்டசிறிமா ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பிடித்த யாழ் நகரத் தந்தை அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் சிவகுமாரன் குண்டு பொருத்தினார்.

தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன் | Sivakumaran Who Fought The Liberation Of Tamils

எனினும் துரையப்பா வருவதற்கு முன்பாகவே அந்தக் குண்டு வெடித்தமையால் அதிலிருந்து அவர் தப்பினார்.

பின்னர் துரையப்பா கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரன் தனித் தாக்குதல் முயற்சிகளுடன் உண்ணாவிரதப் போராடட்டம் போன்றவற்றில் தன்னை இணைத்தார்.

இளைஞர் பேரவையின் உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1970களில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசில் அமைச்சரவையில் இடம்பெற்ற சோமவீர சந்திரசிறியின் வாகனத்திற்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார்.

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

சயனைட் அருந்தி வீரமரணம்

யாழ்ப்பாணம் தமிழரராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரனிடத்தில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. படுகொலைகளை நடத்திய சந்திரசிறியை கொலை செய்ய வேண்டும் என்று சிவகுமாரன் வெளிப்படையாக கூறும் நிலையை அடையுமளவில் சினத்திற்குள்ளானார்.

இதனால் சிவகுமாரன் தேடப்படும் நபரானார். கோப்பாயில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட சிவகுமாரன் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்து வீர மரணம் எய்தினார்.

ஜூன் 05, 1974 இல் தன்னுடைய 24ஆவது வயதில் தமிழ் இனத்திற்காக தன்னை தானே கொடையாக்கிக் கொண்டார்.

தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன் | Sivakumaran Who Fought The Liberation Of Tamils

சிறிலங்கா அரசியலில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட கல்வித் தரப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தமிழ் மிதவாத தலைமைகளால் எதுவும் செய்ய முடியாதபோது சிவகுமாரன் அகிம்சைப் பாதையிலிருந்து விலகி ஆயுதப் பாதையில் சென்றார்.

தமிழ் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை ஆளும் சிங்களத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஒடுக்குமுறையை ஈழ மக்களிடத்தில் தொடர்ந்து பிரயோகித்த போதுதான் சிவகுமாரன் உருவாகினார்.

அப்போதுதான் சிவகுமாரன் ஆயுதப் பாதையை கையில் எடுத்தார்.

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

தனி ஒருவன்

சிவகுமாரனின் வாழ்வையும் மரணத்தையும் அவர் கையில் எடுத்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.

சாதாரணமாக எல்லா மாணவர்களையும் போல தன் படிப்பில் மாத்திரம் அவர் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவர் எல்லா மாணவர்களின் படிப்பிலும் கவனம் செலுத்தினார்.

அவர் எல்லா மாணவர்களின் நலனினும் கவனம் செலுத்தினார். அவர் ஈழ மக்களின் நலனின் கவனம் செலுத்தினார். அவர் ஈழத் தமிழ் மக்களின் விடுதலையிலும் உரிமையிலும் கவனம் செலுத்தினார்.

தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன் | Sivakumaran Who Fought The Liberation Of Tamils

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காது, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கியபோது சிவகுமாரன் இப்படியான போராட்டம் ஒன்றே தேவை என்பதை தீர்க்கமாக உணர்ந்தார்.

தனி ஒருவனாய் சிவகுமாரன் முன்னெடுத்த போராட்டமே பின்னர் ஈழவிடுதலை ஆயுதப் போராட்டமாக விரிந்தது. சிவகுமாரன் ஏன் ஆயுதத்தை கையில் எடுத்தார் என்பதையும் அவர் எப்படியான காலத்தில் தன் தாக்குதல்களை நடத்தினான் என்பதையும் இன்றைய நாளில் ஆராய்வது மிகவும் அவசியமானது.

சிவகுமாரனின் தனிமனித போராட்ட சரித்திரம் நினைவுகூரவும் மதிப்பிடவும் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒன்றாகும். ஈழமும் இளைய தலைமுறையும் என்றுமே மறக்க முடியாத, மறக்கக்கூடாத ஒரு மாவீரனே பொன். சிவகுமாரன்.

தமிழீழத் தேசிய உலகிற்கு தமிழ் பொதுவேட்பாளர் தேவை என வலியுறுத்து

தமிழீழத் தேசிய உலகிற்கு தமிழ் பொதுவேட்பாளர் தேவை என வலியுறுத்து

தலைமுறைகள் மறக்காத மாவீரன்

இன்றைய தலைமுறையில் சிலர் திரையில் தமக்கான நாயகர்களை தேடுகின்றனர்.

ஆனால் நிஜமாகவே நம் தேசத்தில் பெரும் புரட்சியையும் மாற்றங்களையும் விளைவுகளையும் உண்டுபண்ணிய நாயகர்கள் எங்கள் மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் சிறிலங்கா அரசுபல்வேறு தடைகளை ஏற்படுத்திய போதும் பல்வேறு சூழ்ச்சிகளை ஏற்படுத்திய போதும் சிவகுமாரன் போன்ற மாவீரர்களின் நினைவுகளை நினைவுகொள்ளுகின்ற இன்றைய தலைமுறையினர் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன் | Sivakumaran Who Fought The Liberation Of Tamils

இது என்றுமே தொடர வேண்டும். இதுபோன்ற மெய்யான நாயகர்களை நாம் தலைமுறைகள் பின்பற்றுகின்ற போது நமது சமூகம் பண்பட்டும் பண்பாட்டையும் வரலாற்றையும் பின்பற்றியும் மேலெழும் என்பதே உறுதியானது.

தமிழீழ விடுதலையை தமிழர் தேசத்தில் பேரெழுச்சி கொள்ள வைத்த தலைவர் பிரபாகரன் அவர்கள் பொன். சிவகுமாரன் அவர்களை ஒரு அண்ணனாக வழிகாட்டியாக கொள்கிறார்.

அவரது வாழ்வும் போராட்டமும் தலைவர் பிரபாகரனிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமக்காக வாழாது இனத்திற்காகவும் இனத்தின் உரிமைகளுக்காகவும் வாழ்ந்த சிவகுமாரன் அவர்களின் வரலாற்றையும் கதையையும் நாம் அறிகின்ற போது பெரும் பாடங்களை கற்றுக்கொள்ளுகிறோம்.

நல்ல சிந்தனை தூண்டுதல்களைப் பெற்றுக் கொள்ளுகிறோம். இன்றைய தலைமுறை மாத்திரமல்ல ஈழத் தமிழ் தேசத்தின் என்றைய தலைமுறைக்கும் சிவகுமாரன் அவர்கள் வழிகாட்டும் ஒரு நாயகனாக இருப்பார் என்பது திண்ணமானது.

தலைவர் பிரபாகரனிடம் ராஜீவ்காந்தி சொன்ன இரகசியம் ..!

தலைவர் பிரபாகரனிடம் ராஜீவ்காந்தி சொன்ன இரகசியம் ..!

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 06 June, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025