தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு - இன்று வெளியாகும் அறிவிப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) உறுப்புரிமையில் இருந்து தன்னை இடைநிறுத்தி கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவுக்கு இடைக்கால தடை கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தொடுத்த வழக்கின் உத்தரவு இன்று (20) வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்கரன் முன்னிலையில் கடந்த 18.03.2025 அன்று நடந்த வழக்கில் வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
இடைக்காலக் கட்டளை
இந்த நிலையில் இந்த வழக்கின் இடைக்காலக் கட்டளை தொடர்பான உத்தரவு இன்று வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது.
இந்த வழக்கின் நான்காவது எதிராளியான சிறீதரன் மன்றில் தாக்கல் செய்திருந்த பதில் மனுவுக்கு எதிராகவும் மிகக் காட்டமான சூடான வாதத்தை நேற்று முன்வைத்தார்.
மற்றைய மூன்று எதிராளிகளின் சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன். யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்கரன் முன்னிலையில் நேற்றுக் காலை இந்த வழக்கு எடுக்கப்பட்டபோது அது பற்றிய பூர்வாங்க விசாரணைகள் இடம்பெற்றன.
ஒருதலைப் பட்சமாக முடிவு
இதேவேளை, ஒருதலைப் பட்சமாக எந்த விதமான நியாயமும் இல்லாமல் கொள்கையளவிலே இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற பேச்சுவார்த்தையை தமிழரசுக் கட்சி முறித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழில் நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்