தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வந்த படகு சுற்றிவளைத்து பிடித்த இந்திய கடலோர காவல் படை
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் பீடி இலை கடத்த முயன்ற ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பெருமளவு பீடி இலைகளும் கைப்பற்ப்பட்டன.
தூத்துக்குடியை சேர்ந்த காவல் படையினர் அடிக்கடி கடலில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் அவர்களுக்கு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் நேற்று பிற்பகல் நடுக்கடலில் கடலோர காவல் படையினர் வஜ்ரா என்ற ரோந்துக் கப்பலில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
வேகமாக சென்ற நாட்டு படகு
அப்போது அங்கு நாட்டு படகு ஒன்று ரோந்து கப்பலை கண்டதும் மிகவும் வேகமாக செல்ல தொடங்கியது. அதனை கண்ட கடலோர காவல் படையினர் விரைந்து அந்த நாட்டுப் படகை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் நாட்டு படகில் இறங்கி சோதனை மேற்கொண்டனர். அதில் சுமார் மூன்று தொன் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் அந்தப் படகில் ஆறு மீனவர்கள் இருப்பது தெரியவந்தது.அவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்து அழைத்து வந்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள்
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த காட்வின், பிச்சையா, மில்டன், டார்சன், கிங், ரட்சகர் என தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் தூத்துக்குடி அருகே பூல்லாவாளி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு அந்த பீடி இலைகளை கடத்திச் சென்றதும் அம்பலமானது.
அதனை அந்த மீனவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவர்கள் தூத்துக்குடி பழைய துறைமுகம் அழைத்துவரப்பட்டு கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
மேலும் கியூ பிரிவு காவல் துறையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்னரே தமிழக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட ஆறு மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட மூன்று தென் பிடி இலைகளையும் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

