அபாயகரமான ஆறு விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!
accident
sri lanka
people
By Shalini
பயணக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த 24 மணி நேரத்திற்குள் பதிவான ஆறு அபாயகரமான விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குள் அதிக விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விபத்துக்களில் உயிரிழந்த ஆறு பேரில் நான்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன என்றும், இந்த சம்பவத்தில் மக்கள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்