ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு : உறுதிப்படுத்திய எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாகார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் அண்மை நாட்களில் சுயாதீனமாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் தரப்பினரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
கட்சித் தலைவரின் இந்த நடவடிக்கையை அந்த கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரித்திருந்ததோடு, சிலர் எதிர்த்திருந்தனர்.
கட்சிக்குள் பிளவு
இதையடுத்து, கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக பல செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக இம்தியாஸ் பாக்கிர் மாகார் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் காணப்பட்டாலும், குறித்த பிரச்சனை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகமான தீர்வு
இது தொடர்பில் கட்சிக்கு வெளியே கருத்து வெளியிடுவதும் ஊடகங்களுக்கு தெரிவிப்பதும் அர்த்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு ஜனநாயகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |