ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்!
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Samagi Jana Balawegaya
By Kathirpriya
நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என சிறிலங்கா பொதுஜன பெறமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது கிடைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்தியும், ஒழுங்கமைப்பு வலையமைப்பும் கொண்ட கட்சிகள் இரண்டு மட்டுமே இலங்கையில் உள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி எனவும் மற்றது சிறிலங்கா பொதுஜன பெரமுன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மத்திய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |