துணை விமானியின் கோடரி தாக்குதலில் சிதைந்த மண்டை ஓடு : எப்படி உயிர் தப்பினார் ஸ்மித் மச்சார்..!
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தின் இந்திய கப்டன் ஸ்மித் மச்சார், தனது துணை விமானியால் கோடாரியால் தாக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோடாரித் தாக்குதலின் போது அவரது தலையில் ஏற்பட்ட வடுக்கள் மற்றும் காயங்கள் எத்தகைய தீவிரமான ஆபத்தைக் கொண்டிருந்தன என்பது குறித்து நரம்பியல் நிபுணர்கள் தற்போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க நரம்பியல் மருத்துவ நிபுணரின் கருத்து
இத்தகைய கொடூரமான தாக்குதலில் இருந்து அவர் தப்பியது மருத்துவ உலகத்திற்கே ஒரு வியப்பாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் சனத் தீட்சித் கூறுகையில், கப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஏற்பட்ட காயத்தை 'ஒக்ஸிபிடல் காம்பவுண்ட் டிப்ரஸ்ட் ஸ்கல் ஃபிராக்சர் என்று விவரித்துள்ளார்.
அதாவது, தலையின் பின்புறப் பகுதியில் பலத்த கோடரித் தாக்குதலால் மண்டை ஓடு உள்நோக்கி உடைந்து நொருங்கியுள்ளது. இந்த வகையான காயங்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சையானது மிகமிக ஆபத்தானது என்றும், இதில் உயிரிழப்புக்கான வாய்ப்பு சுமார் 40 சதவீதம் வரை இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம்
மூளை எவ்வளவு தீவிரமான பாதிப்பை எதிர்கொண்டது
சிட்னியைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் சோனு பாஸ்கர் குறிப்பிடுகையில், கப்டன் மச்சாரின் தலையில் காணப்படும் குறிக்கோடான வடுக்கள், அவரது மூளை எவ்வளவு தீவிரமான பாதிப்பை எதிர்கொண்டது என்பதைக் காட்டுகின்றன என்றார்.

தலைப் பகுதியில் உள்ள மிக முக்கியமான மூளை நரம்புகளுக்கு அருகில் இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது உடைந்த மண்டை ஓட்டின் எலும்புத் துண்டுகளை அகற்றும் தருணத்தில், ஒரு நிமிடத்திற்குள் சுமார் இரண்டு லிட்டர் வரை இரத்தம் வெளியேறும் அபாயம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதீத இரத்தப்போக்கு மற்றும் மூளை வீக்கம் காரணமாக அவரது உயிர் எந்தச் வினாடியும் பிரியும் சூழல் நிலவியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |