இலங்கையிலுள்ள சீன நாட்டவர்களுக்கு முதன்முறையாக செலுத்தப்பட்டது “பூஸ்டர்” தடுப்பூசி
vaccine
sri lanka
people
china
By Shalini
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற சீன நாட்டவர்களுக்கு இன்று போர்ட் சிட்டி வளாகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சினோபார்ம் தடுப்பூசியை மூன்றாவது டோஸ் 'பூஸ்டர்' தடுப்பூசியாக இவர்கள் பெற்றுள்ளார்.
இது இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியின் முதல் வெளியீடு ஆகும்.
சீனப் பிரஜைகளே இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியை முதலில் பெற்றனர்.
அந்த வகையில் சீனர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் இன்றும் நாளையும் நடைபெறும் என்று கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர். டினு குருகே கூறினார்.
மேலும், போர்ட் சிட்டியில் முதல் மற்றும் இரண்டாவது டோஸைப் பெற்றவர்கள் மூன்றாவது டோஸைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.





