கிழவியை மணப்பெண்ணாக்கும் ராஜபக்சர்கள் - எதிரணி எம்.பி கிண்டல் (காணொளி)
இந்தப் பாதீட்டை எடுத்து நோக்கினால் கிழவி ஒருவரை அலங்கரித்து மணப்பெண்ணாக்கும் கதைதான் நடைபெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“ இலங்கை மக்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு அவர்கள் சுவாசிக்கவே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், இந்தப் பாதீட்டின் மூலம் சுவாசிக்க செயற்கை சுவாசமாவது வழங்குவார்கள் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளை உங்களுக்கு செயற்கை சுவாசம் கூட நாங்கள் வழங்க மாட்டோம் என பசில் ராஜபக்ஸ மக்களுக்கு கூறி உள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றத்துக்கு வரும் முன் அவருக்கு ஏழு அறிவு உள்ளது. அவர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார். எரிபொருள் விலையைக் குறைப்பார் என்று பல கதைகள் சொன்னார்கள். ஆனால் இன்று எல்லாம் பொய் ஆகி விட்டது.
இவர்கள் இயந்திரம் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்று பாதீட்டை தயாரித்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.