வலுவான திட்டத்தின் மூலம் இலங்கையின் நெருக்கடி நிலை மாற்றப்படும் : திலித் ஜயவீர நம்பி்க்கை!
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, அதனை மாற்றுவதற்கான வலுவான திட்டமொன்று தமது கட்சியால் முன்வைக்கப்படுமென தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் மீண்டும் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் குறித்த திட்டம் தயாரிக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
களுத்துயை பகுதியில் இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீரான அரசியல்
சிறிலங்காவின் அரசியல் சீரான நிலைக்கு திரும்புமென்ற நம்பிக்கையில், தமது தந்தை உள்ளிட்ட பலர் கடந்த காலங்களில் முன்னாள் ஆட்சியர்களுக்கு அதிகளவில் ஆதரவு வழங்கியிருந்ததாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலை புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான போராளி : எதிரியே பாராட்டும் தலைவர் என்கிறார் மனோ கணேசன்! (காணொளி)
இந்த பின்னணியில், தற்போது அரசியலில் உள்ள பிழைகள் குறித்து பேசாது, மாற்றமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தாம் அரசியலுக்குள் நுழைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு புதியதொரு அரசியல் முறைமை வேண்டும் எனும் அடிப்படையில் தாம் இருப்பதாகவும், இதற்கேற்ப தமது அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்கள்
சிறிலங்கா சுதந்திரமடைந்ததன் பின்னர் பல ஆட்சியாளர்கள் நாட்டை ஆண்டிருந்தாலும், அவர்களை அனைவரும் பல்வேறு வழிகளில் தோல்வியை எதிர்நோக்கியுள்ளதாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, தாம் அரசியலுக்குள் நுழைந்தமை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை தாண்டி, வெற்றிகரமான அரசியல் நடவடிக்கைகளை தாய்நாட்டு மக்கள் கட்சி முன்னெடுக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |