வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடைவதில் எதிர்மறையான தாக்கங்கள் : வெளியானது தகவல்!
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இலக்குகள் பொருளாதார மீட்சிக்கு சவாலாக அமையும் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், குறித்த இலக்குகள் 2025 ஆம் ஆண்டிலும் தொடரக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், அடுத்த வருடத்திற்காக, ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள 7.1 வீதம் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வருமானம்
எனவே, அரச வருமானமும் குறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்துக்கமைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.1 வீதம் என்ற வருமான இலக்காக அமைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் : உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக நாமல் தெரிவிப்பு!
இது இந்த வருடம் திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமான இலக்கை விடவும் 8.5 வீதம் அதிகமாக காணப்படுகிறது.
வங்கி மறுமூலதனச் செலவுகள்
எனினும், வங்கி மறுமூலதனச் செலவுகள் தவிர்த்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அடுத்த வருடத்துக்கான பற்றாக்குறை 7.6 வீதமாக காணப்படும்.
இந்த நிலையில், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரச வருவாய் இலக்குகளில் சில சிக்கல்கள் உள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும், அரச நிறுவனங்கள் அடுத்த வருடத்தில் 45 வீதம் வருமான அதிகரிப்பை கணித்துள்ளன.
பெறுமதி சேர் வரி
இது அடுத்த வருட ஆரம்பத்தில் நடைமுறையாகும் 18 வீத பெறுமதி சேர் வரியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இது பொருட்கள் சேவைகளின் விலைகளின் மாற்றங்களினால் ஏற்படும் வருமான அதிகரிப்பை பலவீனமாக்கும்.
நுகர்வு பொருட்களுக்கான விலை, அடுத்த வருடம் 8.7 வீதத்தால் அதிகரிக்கும் என்பதுடன் இது இந்த வருடத்தில் 22.1 வீதமாக காணப்படுகிறது.
எதிர்மறையான தாக்கங்கள்
இதன் காரணமாக, அரச வருமானத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள் அரசாங்கத்தின் இலக்குகளை அடைய கடினமான சூழலை உருவாக்கும்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுக்குப் பின்னரான காலப்பகுதியில், சிறிலங்காவின் நிர்வாக சீர்திருத்தத்தை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் அரச வருமான சேர்ப்புக்கு ஆதரவாக அமையக்கூடும் எனவும் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.