நூற்றுக்கணக்கில் மக்கள் செத்து மடிய நூடில்ஸ் பாக்கெட்டிற்கு கணக்கு போட்ட எம்.பி
வரலாறு காணாத அளவிற்கு இலங்கை படும் மோசமான ஒரு நிலைமையை தற்போது எதிர்கொண்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பேரிடரை வைத்து நாட்டில் பாரிய அரசியல் நடந்துகொண்டிருக்கின்றது.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதை தாண்டிலும் தங்களது அரசியல் ஆதாயத்தை தேடி கொள்வதிலேயே அனைவரும் மிகவும் உன்னிப்பாக உள்ளனர்.
அவ்வாறுதான் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்த கருத்தொன்று மக்களிடையே பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அதாவது, “போன வெள்ளத்திற்கு வாங்கிக் கொடுத்த நூடில்ஸ் காசே இன்னும் வரவில்லை இருந்தாலும் இந்த வெள்ளத்திற்கும் நூடில்ஸ் கொடுப்போம்.
இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை, இது தயார் நிலையில் இல்லாததால் நடந்த படுகொலை.
மக்களை நீங்கள் படுகொலை செய்திருக்கின்றீர்கள் தயார் நிலையில் இல்லாமல் இருந்தமை மூலம் மக்களைப் படுகொலை செய்திருக்கின்றீர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நிலையில், இவ்வாறான சமயத்தில் இது போன்ற கருத்துக்கள் தேவையா என்ற அடிப்படையில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு நாட்டில் புயலை வைத்து நகர்த்தப்படும் ஒட்டுமொத்த அரசியல் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |