ராஜபக்ச ஆட்சிகாலத்தில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்: அமைச்சர் பகிரங்கம்
ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் கடற்றொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (26) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக நிற்கும் மூன்று துறைகளில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சும் ஒன்று என்பதை கூறியாக வேண்டும்.
நிதியாண்டு
எமது அமைச்சுக்கு 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 10.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் இலங்கை கடற்றொழில் கூட்டு தாபனத்திலும் கைவைத்தனர், கடந்த காலங்களில் நாசமாக்கப்பட்ட எமது அமைச்சுசார் பத்து நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு ஐந்தாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 2000 ஆயிரம் மில்லியன் ரூபாவும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மாகாணசபைகளின் மீன்பிடி அமைச்சுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகள்
அதாவது எமது அமைச்சுக்கு மட்டும் 2026 வரவு செலவுத் திட்டத்தில் 15 பில்லியனுக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, வரலாற்றில் இம்முறையே இவ்வாறு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடித்துறையில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன, அந்த சவால்களை எதிர்கொண்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றோம்.
வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் மீன்பிடித்துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எமது ஆட்சியில் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டது ஆனால் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் கடற்றொழிலாளர்கள் கொலை என்பன தமது தந்தையின் ஆட்சியில் நடைபெற்றது என்பதை மறந்து இங்கு பேசுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 10 மணி நேரம் முன்