சர்வதேச ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி
சர்வதேச ஓவியப்போட்டியில் இலங்கையைச் (Sri Lanka) சேர்ந்த சிறுமி ஒருவர் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
ஜப்பானில் (Japan) உள்ள யுனிசெப் அலுவலகமும், ஜப்பான் தரச்சான்றிதழ் அலுவலகமும் இணைந்து 23 ஆவது சர்வதேச சிறுவர் ஓவியப்போட்டி நடாத்தியது.
இதன்போது, புத்தளத்தில் உள்ள தேசிய பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பி மலிஷா நிர்மலி (15) என்ற சிறுமி பங்கு பற்றி முதலிடம் பெற்றுள்ளார்.
இலங்கை முதலிடம்
6 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் “இயற்கையை நேசிக்கும் குழந்தைகள்” என்ற தலைப்பில் இந்த ஓவியம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் உலகின் 83 நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிறுவர்கள் சமர்ப்பித்த ஓவியங்களில் இலங்கை முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
ஓவியப் போட்டி
மேலும், குறித்த சிறுமி தேசிய அளவிலான பல கலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
காலியில் உள்ள இலங்கை சிறுவர் கலை நிலையத்தின் பணிப்பாளர் பியசேன டி சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இலங்கையிலிருந்து சிறுவர்கள் இந்த கலைப் போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பித்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |