இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்சுகின்றன...

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Canada
By A. Nixon Dec 30, 2023 07:22 AM GMT
Report
Courtesy: அ.நிக்ஸன்

--கனடா, ஈழத்தமிழர்களின் நியாயப்பாட்டை ஏற்கும் மனநிலை கொண்டுள்ளது என்பதை அதிபர் ரணில், புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட, இராணுவத் தரப்போடு தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் பேராசிரியர் ரொஹான் குனரத்னா ஆகியோர் நன்கு புரிந்துவைத்துள்ளனர். இதன் காரணமாகவே தமக்குச் சாதகமான சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக இமாலயப் பிரகடனம் போன்று மேலும் பல திட்டங்களை வகுக்கும் வியூகங்களுக்கு சிங்களத் தரப்புகள் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன --

புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட ஈழத்தமிழ் அமைப்புகளின் பலத்தை அறிந்த ஒரு பின்னணியிலேதான், சிங்கள அரசியல் தலைவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் குறிப்பிட்ட சில தமிழ் அமைப்புகளையும் தனிநபர் குழுக்களையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகும்.

ஈழத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரச கட்டமைப்புக்குள் இணைந்து வாழத் தயார் என்ற பொய்யான பரப்புரையின் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடா போன்ற நாடுகளில் கணக்கைக் காண்பிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் கடுமையாகும் கட்டுப்பாடு: மீறுவோருக்கு 50000 ரூபா தண்டப்பணம்(காணொளி)

இலங்கையில் கடுமையாகும் கட்டுப்பாடு: மீறுவோருக்கு 50000 ரூபா தண்டப்பணம்(காணொளி)

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை

வட அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, அத்தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவிலோ கனடாவிலோ தமிழீழ விடுதலைப் புலிகளில் உறுப்பினராக இருந்த ஒருவர் அதைக் கூறி அரசியல் தஞ்சம் கோரினால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது.

அவ்வாறான ஒருவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியபின் அல்லது விலக்கப்பட்டபின் கூட அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்கினால் அல்லது விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களுக்கு மட்டுமே கனடாவில் அதுவும் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் புகலிட அந்தஸ்து வழங்கப்படுவது வழமை.

United Kingdom பிரித்தானியா

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நிலைமை அவ்வாறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்து ஆனால் கருத்துநிலையை மாற்றாமல் இருக்கும் பலருக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்படுவது வழமையாகும்.

பிரித்தானிய அரசு புலிகளுக்குத் தடை விதித்திருந்தாலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அங்கு தொடர்ந்தும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் கனடாவில் அவ்வாறானதொரு சூழல் இன்றுவரையும் இல்லை.

இதனால், புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களிடையே கனடாவின் தடை அரசியல் பற்றிய கடுமையான விமர்சனம் இருந்துவருகிறது. 2006 ஆம் ஆண்டு கொன்ஸர்வேடிவ் கட்சியின் ஸ்-ரீபன் ஹார்ப்பர் பிரதமராகி இரண்டு மாதங்களுக்குள், அதுவும் பேச்சுவார்த்தைக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடிய அரசு முதன்முதலாக நடைமுறைப்படுத்தியது.

ஜஸ்ரின் ரூடோவின் அரசியல்  

கனடாவில் தடை விதிக்கப்படுவதற்கு ஏழு வருடங்களுக்கு முன்னர், 1997 இல் அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்து இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தது என்பது இங்கு ஒருசேர நோக்கப்படவேண்டியது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாக்குகளைப் பெற விழையும் தேர்தல் காலங்களின் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் கடுமையான அதிருப்தி குறித்து கனடிய பிரதான கட்சிகள் அறிந்திருப்பதால், இலங்கை அரசு மீதும் தாம் அழுத்தம் தருவதாக, அல்லது தர இருப்பதாக பாவனை செய்வதும் சில அழுத்தங்களை மேற்கொள்வதும் வழமை.

justin trudeau ஜஸ்ரின் ரூடோ

எந்த ஹார்ப்பர் அரசாங்கம் 2009 ஆம் ஆண்டுக்கும் முன்னர் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததோ அதே ஹார்ப்பர் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளாது புறக்கணித்து தமிழ் மக்களிடையே நற்பெயரையும் அதேவேளை இலங்கையில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் அரசியலுக்கும் ஊக்கம் கொடுத்தார்.

கனடாவில் தற்போது லிபரல் கட்சி தலைமையிலான ஆட்சி நடைமுறையில் இருக்கிறது. அதன் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து வருகிறார். இந்தத் தடையை நீடிக்கும் அதேவேளை ஈழத்தமிழர் இன அழிப்புக்கு நீதி கோருவது போன்ற பாவனையையும் ஆங்காங்கே வெளிப்படுத்திவருகிறார்.

இவ்வாறு, கனடாவில் புலம்பெயர் ஈழத்தமிழர் மனநிலையைப் புரிந்துகொண்டு இந்த இரண்டு பிரதான கட்சிகளும் இன அழிப்புக்கு நீதி கேட்பது போன்ற தேர்தல் அரசியற் பாவலாவைக் காட்டிவருகின்றன. இதனை ஈழத்தமிழர்களும் தகுந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ள ஓரளவுக்காவது ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

பிரித்தானியாவில் புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்

பிரித்தானியாவில் புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்

தமிழ் இன அழிப்பு நாள்  

குறிப்பாக, இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்துள்ளது என்றும் அதற்குச் சர்வதேச நீதி வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் தரப்புகளுக்கு ஊடாக முன்வைக்கப்பட்ட தீர்மானம் கனடிய நாடாளுமன்றில் அனைத்துக்கட்சி ஆதரவுடனான தீர்மானமாக வெளிப்பட்டது மட்டுமல்ல, 2022 ஆம் ஆண்டிலிருந்து மே 18 தமிழ் இன அழிப்பை நினைவுகூரும் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ள சூழலும் தோன்றியுள்ளது.

இலங்கையின் இறுதிப் போர் sri lanka final war

ஈழத்தமிழர்கள் மீது தடை விடயத்தில கடுமையாக இயங்கிய கனடா ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற அனுமதித்தது எதற்காக, இன அழிப்பு நினைவேந்தலை அங்கீகரித்தது எதற்காக என்று அங்கு மிகச் சிறிய அளவிலேனும் குடியேறி வாழும் சிங்களத் தரப்பினர் ஆத்திரமடைந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேவேளை சட்ட நடவடிக்கைகளை சவாலாக முன்னெடுத்தும் வந்துள்ளனர்.

கனடாவின் பிரபலமான நகரமாகவும் பெருமளவு ஈழத்தமிழர் வாழுகின்ற பகுதியாகவும் ரொறன்ரோ விளங்கும் போதும், அந்த நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் இலங்கை அரசின் தூதராலயமும் குறைந்தளவில் என்றாலும் தாக்கம் செலுத்தக்கூடிய அளவில் சிங்கள சமூகமும் காணப்படுகின்றன.  

இந்தச் சிங்கள அமைப்புகள் இன அழிப்பு என்ற கருத்தியலுக்கு கனடிய அரச அங்கீகாரம் கிடைப்பதை எதிர்க்கின்றன. கனடாவைத் தொடர்ந்தும் இலங்கையின் பக்கம் வைத்திருக்கும் செயற்பாடுகளை அவை தீவிரப்படுத்தியுள்ளன.

அண்மையில் இலங்கைத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட புலம்பெயர் தனிநபர்க்குழுவான சுரேன் சுரேந்திரன் மற்றும் கனடிய தமிழர் பேரவை முட்டுக்கொடுக்கும் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பின் செயற்பாடுகளோடு சிங்கள புலம் பெயர் அமைப்பும் முட்டுக்கொடுத்து இயங்கிவருவதற்கு கனடாவில் வலுப்பெறும் ஈழத்தமிழர் சார்பான அரசியலைத் தடுக்கும் நோக்கம் உள்ளது என்பது வெளிப்படை.

இலங்கைப் பெண்களை ஏமாற்றி பண மோசடி : நைஜீரிய பிரஜைகள் கைது

இலங்கைப் பெண்களை ஏமாற்றி பண மோசடி : நைஜீரிய பிரஜைகள் கைது

 

இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோருதல்

கீழே தரப்படும் சிங்கள அமைப்பின் காணொளி அதற்குச் சாட்சியாகிறது. அதேபோல இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்ட இன அழிப்பு செய்தி தொடர்பான கருத்தும் இலங்கை அரசின் இது தொடர்பான பயத்தையும் வெளிப்படுத்துகிறது.

கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சூழலில், அல்லது அதற்கு முன்னர் திடுமென அவ்வாறு நடைபெறும் சூழல் எப்போது தோன்றினாலும், அதை எதிர்கொள்வதில் தற்போதைய ஆளும் கட்சியான லிபரல் கட்சிக்கு எதிராகப் போட்டியிடக்கூடிய எதிர்க்கட்சித் தலைவரும் கென்சர்வேற்றிக் கட்சியின் பிரதமருக்கான வேட்பாளருமான பியர் பொலியெர்வ் கூட தற்போது ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன அழிப்புக்கு கனடா நீதி கோரும் எனக் கூற ஆரம்பித்துள்ளார்.

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்சுகின்றன... | Sl Gov And Sinhalese Organizations Fear Canadian

இது மேலோட்டமாக வாக்கு அரசியலாகத் தெரிந்தாலும் இலங்கை தொடர்பான கனடா அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோருதல் என்ற கோரிக்கையின் வகிபாகம் வலுப்பட ஆரம்பித்துள்ளதை நாம் இங்கு கூர்மையாக நோக்கவேண்டும்.

இதை மேலும் செம்மைப்படுத்தும் கடமை அங்குள்ள புலம்பெயா ஈழத்தமிழர் அமைப்புகளுக்கு உண்டு என்ற கருத்தை கனடா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தேர்தல் அரசியலுக்காக இரண்டு கட்சிகளும் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பான கருத்தியலை ஆதரிக்க ஆரம்பித்திருந்தாலும் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் இதுவரை இன அழிப்புக்கான நீதி தாக்கம் செலுத்த ஆரம்பிக்கவில்லை என்பதையும் இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடு

கனடிய அரசின் ஐ.நா. மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும் ஒரு காலத்தில் சிங்களத் தரப்போடும் தமிழ்த் தரப்போடும் சமஸ்டித் தீர்வு குறித்து கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்த முனைந்தவருமான பொப் ரே கனடிய அரசு ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு என்ற கருத்தியலைத் தனது அதிகாரபூர்வ நிலைப்பாடாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று 2023 ஆரம்பத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்சுகின்றன... | Sl Gov And Sinhalese Organizations Fear Canadian

கனடாவில் பழங்குடியினருக்கு நடைபெற்றது இன அழிப்பு என்று 2019 ஜூன் மாதத்தில் ஆணைக்குழுவின் தீர்ப்பு வெளியாகியிருந்தது. ஆனால், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது பழங்குடியினர் மீது இன அழிப்பு நடாத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை. 

கனடாவில் இன அழிப்பு என்ற தீர்ப்பு வெளிப்பட்டவுடன் கனடிய பிரதமரான ஜஸ்ரின் ரூடோ உடனடியாக இன அழிப்பு என்ற சொல்லை தனது ஏற்பில் வெளிப்படையாக உடனடியாக ஒத்துக்கொள்ளாவிடினும் மிக விரைவில் இன அழிப்பு என்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

கனடாவில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கனடா அரசின் இலங்கை பற்றிய கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்குப் புலம்பெயர் தமிழர்கள் செயலாற்றினால் அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. கனடா மூலமாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் நிலையும் உருவாகலாம்.

சீக்கியர்களின் காலிஸ்தான் விடயத்தில் உலக அரசியலில் தாக்கம் செலுத்தவல்ல பிராந்திய வல்லாதிக்கமான இந்தியாவுடன் முரண்படும் நிலைக்கு கனடிய அரசு சென்றுள்ள சூழலில், இலங்கை அரசு, குறிப்பாக சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகள், ஈழத்தமிழர் இன அழிப்புக்கான சர்வதேச நீதி பற்றி கனடாவில் ஏற்பட்டுவரும் அங்கீகார மாற்றம் தொடர்பாக ஆழமான அச்சத்தைக் கொண்டுள்ளன. இது புலம் பெயர் ஈழத்தமிழர் அரசியல் வலுவைக் காட்டுகிறது.

இக் காரண - காரியங்களினால் ஈழத் தமிழர்கள் தொடர்பான விடயத்தில் கனடாவின் போக்கில் மாற்றம் இருப்பதை அறிந்தே கனடாவில் இயங்கும் தமிழ்க் காங்கிரஸில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்களையும் வேறு சில தனிநபர்களையும், சில தரப்புகள் தம் பால் ஈர்த்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள் பக்கம் நிற்பதுபோல கனடா அரசுக்குக் கணக்குக் காட்ட முனைகின்றன.

 இமாலயப் பிரகடனம்

ஈழத்தமிழர்களின் சில பொது அமைப்புகள் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புடன் இணக்க அரசியலுக்குச் சம்மதித்துள்ள நிலையில் தமிழ் இன அழிப்பு என்று பேச வேண்டிய அவசியம் இல்லையெனக் கனடா அரசுக்கும் கனடாவில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளுக்கும் இலங்கை அரசும் சிங்கள பேரினவாதத் தரப்புகளும் பாடம் கற்பிக்க முற்படுகின்றன.

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்சுகின்றன... | Sl Gov And Sinhalese Organizations Fear Canadian

கனடா அரசு ஈழத்தமிழர்களின் நியாயப்பாட்டை ஏற்கும் மனநிலை கொண்டுள்ளது என்பது பற்றித் தற்போதைய இலங்கை ஒற்றையாட்சி அரசின் அதிபர் ரணில், புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட, இராணுவத் தரப்போடு தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் பேராசிரியர் ரொஹான் குனரத்னா ஆகியோர் நன்கு புரிந்துவைத்துள்ளனர். 

இதன் காரணமாகவே தமக்குச் சாதகமான சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக இமாலயப் பிரகடனம் போன்று மேலும் பல திட்டங்களை வகுக்கும் வியூகங்களுக்கு சிங்களத் தரப்புகள் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன.

உலகத் தமிழர் பேரவை என்ற தனிநபர்க்குழுவில் இருந்து பல நாடுகளின் தமிழ் அமைப்புகள் தமது நிலைப்பாடு வேறுபாடானது என்பதை வெளிப்படுத்தியிருந்தாலும், கனடாவில் இயங்கிவரும் ஒரு அமைப்பான கனடிய தமிழ்க் காங்கிரஸ் உலகத் தமிழர் பேரவையின் நிலைப்பாட்டுக்கு முண்டுகொடுத்துவருகிறது.

இந்த அமைப்பு அண்மையில் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டுள்ளது. இந்த அமைப்பு சுமந்திரனோடும் சாணக்கியனோடும் இணைந்து செயற்படும் தன்மையைக் கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மக்களின் எதிர்ப்பு வலுத்துவரும் சூழலில் தமிழக் காங்கிரஸின் முக்கிய ஆதரவாளரும் கனடிய அமைச்சருமான கரி ஆனந்த சங்கரி தற்போது இமாலயப் பிரகடனத்தை முன்வைத்துச் செயற்படும் அணியுடன் தனக்கு உடன்பாடில்லை என்ற கருத்தை வலிந்து முன்வைத்துள்ளார் என்பதும் இங்கு நோக்கப்படவேண்டியது.

போலியான துவாரகா 

சிங்கள அரசியல் தலைவர்கள் அவசர அவசரமாக இலங்கையின் பொருளாதார பலவினங்களுக்கு மத்தியிலும் கனடா போன்ற மேற்கு நாடுகளை மயக்கி, மீண்டும் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குரிய சாதகமான அரசியல் சூழலை உருவாக்க முற்படுவதன் விளைவுகள்தான் இந்த இமாலயப் பிரகடனம் என்பது தெளிவாகியுள்ளது.

ஆனால், கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணைக்குரிய ஆவணங்களைத் தயார்படுத்தல் போன்ற எந்த ஒரு வேலைத் திட்டங்கள் குறித்தும் தமிழ்த்தேசியக் கட்சிகள் தாயகத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதாக இல்லை.

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்சுகின்றன... | Sl Gov And Sinhalese Organizations Fear Canadian

துவாரகா என்ற பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்டதாக வர்ணிக்கப்படும் அறிக்கை தொடர்பாக தேவையற்ற ஆய்வுகளைச் செய்துகொண்டிருக்கும் சில தமிழ் ஊடகங்கள் கூட இது பற்றிய காத்திரமான ஆய்வுகளைச் செய்வதில்லை.

கனடாவின் சமாகலப் போக்கைப் பயன்படுத்திக் கனடா அரசின் ஊடாக இன அழிப்பு என்பதைச் சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லக்கூடிய வழிமுறைகள் பற்றி ஆராய தமிழ் சிவில் சமூகத்தினரோ, பல கருத்துருவாக்கிகளோ செயற்பட ஆரம்பிக்கவில்லை.

ஆனால் கனடாவின் தற்போதைய போக்கைப் புரிந்துகொண்டு இமாலயப் பிரகடனம் போன்ற பொய்யான நல்லிணக்கப் பொறிகள் மூலமாகச் சிங்கள அரசியல் தலைவர்கள் காய் நகர்த்துகின்றனர். 

இன அழிப்பு என்பதை கனடா தனது இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் இணைப்பதற்கு முன்னர் இலங்கை கனடா அரசை தமக்குரியதாக மாற்றும் உத்திகளை வகுத்து வருகின்றது.

உக்ரைன் - ரஷ்ய போர்

உக்ரைன் - ரஷ்ய போரினாலேயே கனடா இந்தியாவுடன் முரண்பட்டது என்றும் அதற்காக சீக்கிய விவகாரத்தை அது பயன்படுத்தியது என்றும் விமர்சனங்கள் இருந்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தைக் கனடாவில் வாழும் சீக்கியர்கள் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிரான கருத்தியலுக்குப் பயன்படுத்தத் தவறவில்லை என்பதையும் இங்கு ஈழத்தமிழர்கள் நோக்கவேண்டும்.

மிகப் பெரிய இந்தியாவுடன் கனடாவைச் சீக்கியர்கள் முரண்பட வைத்தனர் என்றால், ஈழத்தமிழர் விவகாரத்தில் கனடாவை மிகச் சிறிய நாடான இலங்கையுடன் முரண்படச் செய்வதற்குரிய உத்திகளை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயன்றால் நிச்சயம் சாதிக்கமுடியும்.

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்சுகின்றன... | Sl Gov And Sinhalese Organizations Fear Canadian

ஆக, புலம்பெயர் அமைப்பு என்ற போர்வையில் வெள்ளை வேட்டிகளுடன் இலங்கையில் மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்து இமாலயப் பிரகடனத்தைக் கையளித்த உலகத் தமிழர் பேரவை என்ற தனிநபர் குழுக்கள், மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கில் ஈழத்தமிழர் விவகாரத்தில் எழக்கூடிய சாதகமான விளைவுகளைக் கருவறுக்கின்றனர் என்பது மட்டும் இங்கே தெளிவாகிறது.

இது தொடர்பாக தாயகத்தில் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தேர்தல் அரசியல் புரியும் கட்சிகள் என்ன தெளிவைக் கொண்டுள்ளன என்பதும், சிவில் சமூகம் மற்றும் கருத்துருவாக்கிகள் எவ்வகையான புரிதலைக் கொண்டுள்ளனர் என்பதும் கூட கேள்விக்குறிகளாகவே தொக்கு நிக்கின்றன.

மாறாக, புலம்பெயர் தமிழர்களின் தாக்கம் ஈழத்தமிழர் தேசிய அரசியலில் நலிவடைந்துவருகிறது என்ற புரிதலற்ற கருத்தியலையும் சிலர் முன்வைத்துவருகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டையும் தாயகத் தமிழர் தரப்பின் செயற்பாட்டையும் ஒரு கோட்டில் இணைத்து நகர்த்துவதில் தாயகத் தரப்புகள் புரிதலற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த நிலையில் காத்திரமான மாற்றம் அவசியமாகிறது..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் A. Nixon அவரால் எழுதப்பட்டு, 30 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019