ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத தீர்க்கதரிசனம்

Jaffna Liberation Tigers of Tamil Eelam
By Vanan Aug 04, 2023 05:59 AM GMT
Report

ஈழத்தமிழர்களாகிய எமது போராட்ட வரலாறு இந்த உலகின் ஏனைய போராட்ட அமைப்புகளிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட ஒன்றாகும்.

விடுதலை வேட்கைகொண்ட ஒரு இனம் தன்னுடைய சுதந்திரத்தை தானே போராடிப்பெற துணிந்த இந்தப் போராட்ட வடிவமானது காலச்சரித்தில் பொன் எழுத்துக்களால் வரையப்பெற்ற உயரிய ஒரு சம்பவமாகும்.

அந்த வரலாற்று வழியில் இன்றைக்கு சுமார் மூன்றரை தசாப்தங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில் 1987 ஆம் ஆண்டு சுதுமலை அம்மன் கோவி்ல் முன்றலில் சுதுமலை பிரகடனம் நிகழ்ந்தேறியது.   

ஒவ்வொரு ஈழத்தமிழரும் தம் வாழ்நாளில் எப்படியாவது ஒருதடவையாது கண்டுவிட வேண்டும் என நினைக்கும் ஒருவர், உலகத்தமிழர்கள் தமது தலைவராக, தமது இதயத்துள் வைத்து பூஜிக்கின்ற ஒருவராக, ஈழத்தமிழினத்தை மீட்கவந்த மீட்பராக கொண்டாடிய தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் முன் முதல்முறையாக தோன்றிப்பேசிய அந்த வரலாற்று நிகழ்வு அன்று இடம்பெற்றது . இதுவே சுதுமலைப் பிரகடனம் எனவும் வழங்கப்படுகிறது.   

ஈழத்தமிழர்களை முழுமையாக நம்ப வைத்து அவர்களின் ஆயுத போராட்ட வடிவத்தை ஊக்குவித்து பின் அத்தனை ஆசைகளையும் நிராசைகளாக்கிய இந்திய வல்லாதிக்க அரசு ஒருதலைப்பட்சமாக சிறிலங்கா அதிபருடன் மேற்கொண்ட இந்திய இலங்கை ஒப்பந்ததை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்ட தேசிய தலைவர் அவர்கள் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழீழ தனியரசு ஒன்றே தீர்வென தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அந்த பேச்சு , தலைவரின் விலைபோகாத தன்மை , தமிழினத்தின் எதிர்காலம் மீதான தீர்க்கதரிசப்பார்வை இப்படி ஏராளமான தனித்துவங்களை காண்பித்த அந்த நிகழ்வு தமிழர் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்த ஒப்பந்ததினால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்ததை விழுங்கிவிடும். காலம் வெகுதொலைவில் இல்லை. என்ற அந்த வார்த்தைகள் எந்த அளவுக்கு தீர்க்கதரிசனமானது என்பது இன்றளவில் நாம் உணர்திருப்போம். 

அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் கூடியிருந்த இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் முன் தோன்றிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் இந்தியாவை நாங்கள் நேசிக்கின்றோம் என்ற தலைப்போடு தனது வரலாற்று பேருண்மைகளைத் தாங்கிய தீர்க்க தரிசன உரையை நிகழ்த்துகின்றார்.

அந்த உரையில்

ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத தீர்க்கதரிசனம் | Suthumalai Declaration

எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே…

இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் – இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.

பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன - பல கேள்விக்குறிகள் இருந்தன.

இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா? என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம்.

ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.

இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய – இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது.


ஆகவேதான், இந்திய அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது.

ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம்.

ஆனால், நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது?

இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது.

பதினைந்து வருடங்களாக ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனை ஈட்டி, எத்தனையோ உயிர்பலி கொடுத்துக் கட்டி எழுதப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒருசில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.

திடீரென கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணியாக்குகிறது.

ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், எமது பிரச்சினைகளை மனம்திறந்து பேசினேன்.

சிங்கள இனவாத அரசின் மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதையும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.

எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார்.

பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க, இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம்.

இந்த நம்பிக்கையில் தான் நாம் இந்தியச் சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.

நாம் எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உங்களது பாதுகாப்புக்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விடிவுக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.

நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்.

ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடம் பெற்றுக்கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது, இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது.

நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவருடைய உயிருக்கும், பாதுகாப்புக்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன்.

இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள் இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.

தமிழீழ லட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால், எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.

தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்” என்று தனது உறுதியான நிலைப்பாட்டினையும் ஈழத்தமிழர்களின் எதிர்காலவாழ்வு தொடர்பிலான தீர்க்கதரிசனத்தையும் முன்வைத்திருந்தார்.   

ஈழத்தமிழர்களின் தேசநலனில் இந்தியாவின் நிலைப்பாடு

ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத தீர்க்கதரிசனம் | Suthumalai Declaration

வல்லரசுகளின் கட்டளைகளுக்கு அடிபணியாத வல்லுறூகளின் அதிகார இறுமாப்புகளுக்கு அடங்காத பந்த பாசங்களுக்குள் முடங்கிவிடாத யாருக்கும் விலைபோகாத தேசத்தலைமகனின் அந்த அன்றைய வார்த்தைகளே சுதுமலைப் பிரகடனமாகியது.   

ஈழத்தமிழர்களின் தேசநலனில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை தெட்டத்தெளிவாக ஈழத்தமிழர்கள் உணர்ந்துகொள்ளும்படியாக,

இன்றுவரை ஈழத்தமிழர்கள் தங்கள் முடிசூடா மாமன்னனாகவே கொண்டாடுகின்ற தேசிய தலைவரினால் நிகழ்த்தப்பட்ட,

பல வரலாற்று பதிவுகளுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்ட பரிமாணத்துக்குமான ஒரு அடித்தளமாக விளங்கிய சுதுமலை பிரகடத்தையும் அது இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அன்றைய ஓகஸ்ட் நான்காம் நாளினையும் ஈழத்தமிழர்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள்!

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012