சீனாவிடமிருந்து கடனுதவி பெற தீர்மானித்துள்ள அரசாங்கம்
சீனாவிடம் (China) இருந்து ஐந்நூறு மில்லியன் அமெரிக்க (United States) டொலர்கள் கடன் உதவியை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
கண்டி (Kandy) அதிவேகப் பாதையின் எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக குறித்த கடனுதவியைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதிவேகப் பாதை
கண்டி அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்தமைக்கு அன்றைய ஜே.வி.பி. உள்ளிட்டவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமே காரணமாக அமைந்திருந்தது.
இந்தநிலையில், அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதிவேகப்பாதை நிரமாணப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
நிர்மாணப் பணிகள்
இதனடிப்படையில் அதற்காக முன்னர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த சீன நிறுவனத்திடமே அதற்கான நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்காகவே சீனாவின் எக்சிம் வங்கியில் இருந்து ஐந்நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாகப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

