ரணில் அரசாங்கத்தில் திருடர்கள்! மேர்வின் சில்வா குற்றச்சாட்டு
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் பல திருடர்கள் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த திருடர்கள் கூட்டத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் முன்னிலை வகிப்பதாகவும் அவர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க செயல்படுவதாகவும் மேர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாம் அமைக்கும் புதிய அரசியல் கட்சி தலைமையிலான ஆட்சியின் போது விரட்டியடிக்கப்படுவார்கள் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊழல் நடவடிக்கை
இலங்கையின் தேசிய வளங்களை விற்பனை செய்த மற்றும் அவற்றை திருடி ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் தமது ஆட்சிக்காலத்தின் போது கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனது அரசியல் பயணத்தில் இதுவரை எந்தவொரு ஊழல் நடவடிக்கையிலும் தான் ஈடுபட்டதில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் கிறிஸ்தவ மக்கள் இந்த உலகினை விட்டு பிரிந்த சம்பவம் தொடர்பான முதலாவது சந்தேக நபரும் அப்போதைய அதிபருமான மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |