இன்று முதல் வழமைக்கு திரும்பிய சுகாதார சேவைகள்
நாட்டில் 72 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று (03) காலை 6.30 உடன் நிறைவடைந்துள்ளது.
அதற்கமைய சுகாதார சேவைகள் இன்று முதல் வழமை போல இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
ரமேஸ் பத்திரனவுடன் கலந்துரையாடல்
இந்நிலையில் 72 சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரனவுக்கும் இடையில் சுகாதார அமைச்சில் நேற்று (02) மாலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது அதிபரின் செயலாளர் மற்றும் திறைசேறியின் செயலாளருடன் எதிர்வரும் 6ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து, 72 சுகாதார தொழிற்சங்கங்களும், முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை எதிர்வரும் புதன்கிழமை (07) வரை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |