குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை
குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய உலகின் 13 இடங்களின் பட்டியலில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.
பொக்ஸ் செய்தி (Fox News) தயாரித்துள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடியதும், விடுமுறையை சிறப்பாக கழிப்பதற்கும் உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
எனவே குறித்த பட்டியலில் இலங்கையை உள்ளடக்கியுள்ளமைக்கான காரணங்களாக பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.
பூர்வீக வனவிலங்குகளை பார்வையிடலாம்
“இலங்கையில், யானைகள் போன்ற பூர்வீக வனவிலங்குகளை அருகில் சென்று பார்வையிடமுடியும்.
அதுமட்டுமன்றி, கடற்கரைக்கு சென்று சூரியஒளியில் நேரத்தை கழிக்க முடியும்.
நீங்கள் இலங்கையில் தங்குமிடங்களுக்கு சுமார் 20 முதல் 40 டொலர் வரை செலவழிக்க எதிர்பார்க்கலாம்.
உணவிற்கு குறைந்த செலவு
சராசரியாாக உணவுக்கு சுமார் 5 டொலர் மட்டுமே செலவாகும்.“ என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, கிரீஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஒரு குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடமாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |