தேர்தல் முடிவுகளால் தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளானது தென்னிலங்கை தரப்பினை விட தமிழர் தரப்பில் பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
காரணம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பாரிய தோல்வியை தழுவி மக்களினால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.
கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மை, தலைமைகளின் சிக்கலான அரசியல் போக்குகள் மற்றும் கட்சி தலைமைகளின் பொறுப்பற்ற அரசியல் நடவடிக்கைகள் என்பன தமிழ் கட்சிகளை நிராகரித்தமைக்கான காரணமாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையில், தமிழ் மக்களின் நிராகரிப்பு என்பது தென்னிலங்கை தரப்புக்கு மிகவும் சாதகாமாக அமைந்ததுடன் தமிழர் பிரதேசங்களில் தென்னிலங்கை தரப்புக்களின் அரசியல் ஊடுறுவலுக்கு இது பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது.
இதையடுத்து, தமது நிலையை அறிந்த தமிழ் தரப்பு அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை தம்வசப்படுத்த பலதரப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில், தமிழ் கட்சிகளின் ஒற்றுமை இனி பாதிக்கப்படாது என்ற ரீதயிலும் வாக்குறுதிகளை வழங்கி இருந்தனர்.
இதன் பிரதிபலனாக நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு தமது முழு ஆதரவையும் வழங்கி அதனூடாக தமிழ் தலைமைகளுக்கு அரசியல் பாடமொன்றை தமிழ் தரப்பு மக்கள் கற்பித்திருந்தனர்.
எனவே, உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ் தலைமைகளும் மறுபடியும் மக்களின் நிராகரிப்பை சந்திக்க கூடாது என்ற அச்சத்திலும் மற்றும் தமது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தற்போது பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கின்றப்படுகின்றது.
இந்தநிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் குறித்த நிலைப்பாடு, இனி வரும் காலங்களின் தமிழ் தலைமைகளின் அரசியல் நடவடிக்கைள் மற்றும் தமிழ் மக்கள் அரசியல் தலைமைகளிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் மக்கள் வெளிப்படையாக தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
