மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் - இரத்து செய்ய வலியுறுத்தும் தரப்பு

Batticaloa Death Penalty National People's Power - NPP NPP Government
By Thulsi Oct 09, 2026 04:09 AM GMT
Report

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றக் கைகொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரியணிலாவணை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவாஸ்தானத்தின் பிரதம குரு சிவசரி பத்மநிலோஜன் குருக்களே இந்த உருக்கமான மனிதாபிமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அவர் ஆற்றியுள்ள விசேட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது பிராந்தியத்தைச் சேர்ந்த அனோஜன் எனும் இளைஞன், வறுமை மற்றும் குடும்பச் சுமை காரணமாகவே சவுதி அரேபியாவுக்குத் தொழில் நிமித்தம் சென்றிருந்தார்.

யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

 மரண தண்டனை 

அங்கு சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட கருத்துக்காக அவருக்கு ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் - இரத்து செய்ய வலியுறுத்தும் தரப்பு | Sl Moves To Save Man Sentenced To Death In Saudi

இந்நிலையில், மேல்முறையீட்டின் மூலம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் அவரது குடும்பத்தையும், முழுச் சமூகத்தையும் பேரதிர்ச்சியிலும் மீளாத் துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

உணர்ச்சிவசப்பட்டுச் செய்த தவறுக்காக ஒரு இளைஞனின் வாழ்க்கையையும், அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் அழிப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும். முதலாவதாக, இச்சம்பவம் தொடர்பாக எனது சமூகம் மற்றும் சமயம் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கின்றேன்.

தவறு செய்த ஒருவர் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்குவதே மேலான பண்பாகும்.

தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

சமூகங்களுக்கிடையில் மீள்கட்டமைப்பு

தன்னை நோக்கி வந்த கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் கூட மன்னித்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் இஸ்லாமிய இறுதிக்கூதர் நபிகள் நாயகம் (ஸல்) என்பதை நாங்கள் அறிவோம். இஸ்லாம் என்பது சமாதானத்தையும் கருணையையும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் - இரத்து செய்ய வலியுறுத்தும் தரப்பு | Sl Moves To Save Man Sentenced To Death In Saudi

யுத்த வடுக்களிலிருந்து மீண்டு, தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மீள்கட்டமைப்பு, சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்ப நாம் முயலும் இக்காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்கள் சமூக உறவுகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடக் கூடாது.

எனவே, இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களும், மதத் தலைவர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் தார்மீக உணர்வோடு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும்.

சவுதி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் உரிய அழுத்தங்களை வழங்கி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் அந்த இளைஞனை விடுவித்து, தாய்நாட்டிற்கு அழைத்து வந்து அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என ஒரு இந்து மதக் குருவாகக் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026