இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்லும் எம். பிக்களின் சொத்து விபரம்
தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை(Srilanka) நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பான பட்டியல்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இது தொடர்பில், கடிதமொன்றை எழுதியுள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்
குறித்த கடிதத்தில் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய சமர்ப்பிப்புகளை செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்தவர்களின் பெயர்ப்பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களே இன்னும் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர்களும் விரைவில் தமது விபரங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் குசானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |