கலைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்! உறுதியாக கூறும் எம்.பி
இலங்கையில் (Sri Lanka) அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நாடாளுமன்றம் நிச்சயம் கலைக்கப்படுமென சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த அவர் நடவடிக்கை எடுப்பார என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
இலங்கையில் முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதன் மூலம் நாடாளுமன்றத்தை கலைக்க ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு அதிபர் தேர்தலை நடத்த ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், மீண்டும் சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்கவால் பதவியேற்க முடியுமென டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |