தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக மனுத் தாக்கல்! ஜே.வி.பி அதிரடி
சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளது.
அரசியலமைப்பு பேரவையை மீறும் வகையில் வழங்கப்பட்ட இந்த நியமனத்துக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
விமர்சனம்
தேஷபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பை மீறி தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற தலையீடு
அரசியலமைப்பு பேரவை அதன் தீர்மானத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், அதனை பொருட்படுத்தாது குறித்த நியமனத்துக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்து, குறித்த நியமனம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்ப்பார்த்திருப்பதாக ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |