2 வருடங்களில் 27,000 இராணுவத்தினர் பதவி விலகல் : டலஸ் அழகப்பெரும
Sri Lanka Police
Dullas Alahapperuma
Sri Lanka Politician
By Beulah
அரசியல்வாதிகளால் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு துறையே காவல் துறை என நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று(23) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் பாதுகாப்பில் சிக்கல்
“27,000 இராணுவத்தினர் கடந்த இரண்டு வருடங்களில் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.
இங்கு பிரச்சினை உள்ளது, உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை என நான் நம்புகிறேன்.
பொதுமக்களின் பாதுகாப்பில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவநம்பிக்கை வெளிப்பட்டது. நாட்டில் மாதத்துக்கு 50 கொலைகள் இடம்பெறுகின்றன.” என வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை! மறுக்கப்படும் நுழைவு விசா: பொங்கியெழும் சரத் வீரசேகர
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி