ஆட்டம் காணும் தென்னிலங்கை அரசியல்: கடவுள் ஆசிக்காக விரையும் முக்கிய புள்ளிகள்
முன்னாள் அமைச்சர்கள், உயர் பதவியில் இருந்த அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சமீபத்திய நாட்களில் பல கோயில்கள், விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம கோயிலுக்கு மாத்திரம் சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா சென்ற அரசியல்வாதி
இதேவேளை, பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு உயர் அரசு அதிகாரி, சிறப்பு பாதுகாப்புடன் அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதி தேரரை சந்தித்து, அப்பகுதியின் முன்னணி துறவிகளைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், முன்னாள் அரசியல்வாதி ஒருவர் இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள ஒரு கோயிலுக்கு பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.
பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசு அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகளின் நடத்தைகளும் வழமைக்கு மாறாக தற்போது மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 6 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்