அதிபர் தேர்தல் 2024 : ரணிலின் தீர்மானத்தை ஆதரிக்கும் மொட்டு கட்சி!
இலங்கையில் அடுத்த ஆண்டு அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ள நிலையில், முதலில் அதிபர் தேர்தலை அவர் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தலுக்கு முன்பாக பொதுத் தேர்தலை நடத்த ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த பின்னணியிலேயே, இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்படாதெனவும் அடுத்த ஆண்டில் அனைத்து தேர்தல்களும் முறையாக நடக்குமெனவும் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
அதிபர் தேர்தல்
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள், அதிபர் தேர்தலை முதலில் நடத்துமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கட்சியினரின் கோரிக்கைக்கமைய அடுத்த ஆண்டில் அவர் அதிபர் தேர்தலை முதலில் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொட்டு கட்சியின் ஆதரவு
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் இந்த தீர்மானத்தை சி றிலங்கா பொதுஜன பெரமுனவும் ஆதரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் அதிபர் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |