ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பதவி நீடிப்பில் சிறிலங்கா கடுப்பு...! வாக்களிப்புக்கு ஓடி ஒளிப்பு
ஐ.நாவின் தற்போதைய மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்களிப்பு நடந்தபோது, அந்த வாக்களிப்பில் பங்கெடுக்காமல் விலகியிருந்த 13 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று.
இந்த நகர்வின் மூலம் வோல்கர் டர்க்கின் பதவி நீடிப்பில் தனக்கு உடன்பாடு இல்லையெனக் காட்டியுள்ளது.
கடந்த வருடம் இலங்கைக்குச் சென்ற துர்க், அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது யாழ். செம்மணிப் புதைகுழிப் பகுதிக்கும் சென்று பார்வையிட்டிருந்தார்.
அத்துடன், சிறிலங்கா விரும்பியது போலத் தமிழர்கள் மீதான மனித உரிமை மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய செயல்முறைகளை அவர் கைவிடத் தயாராக இல்லை.
இதற்கு மாறாக, போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் திட்டத்திற்கு மனித உரிமைப் பேரவை தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை வெளியிட்டதால் இந்த நிலைக்கு வந்துள்ள சூழலில், இலங்கையிலும் அனுர அரசாங்கத்துக்கு எதிராக இந்தியப் பாணி கரப்பான்பூச்சி போராட்டம் வெடிக்கும் என எதிர்க்கட்சிகள் நம்பிக் கை வைக்கத் தலைப்படும் நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |