அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் : சர்வமத தலைவர்கள் கோரிக்கை

Tamils Mannar Anura Kumara Dissanayaka Saudi Arabia
By Independent Writer Sep 25, 2026 06:56 AM GMT
Report
Courtesy: நயன்

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி அரசாங்கத்திடம் முன்வைப்பதாக மன்னார் மாவட்ட சர்வ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (24) மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் சர்வமத பேரவையின் தலைவர் சிவசிறி தர்மகுமார குருக்கள், மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி ஏ.எஸ்.எம்.அசீம், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை...! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

சவுதி அரசாங்கம் மன்னிக்க வேண்டும்

இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு வார காலமாக எமது இலங்கைத் திருநாட்டில் பேசுபொருளாக மாற்றப்பட்டிருக்கின்ற விடயம் சகோதரர் அனோஜன் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற மரண தண்டனை.

முகப்புத்தக பதிவின் காரணமாக, முஹம்மது நபி பற்றிய அவதூறு வார்த்தை காரணமாக, சவுதி அரசாங்கத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தண்டனை நீக்கப்பட வேண்டும், மன்னிக்கப்பட வேண்டும், அவருக்கு வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த உலகத்திலே வழங்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த இடத்திலே நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம்.

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் : சர்வமத தலைவர்கள் கோரிக்கை | Sl Tamil Youth Anojan Sentenced To Death In Saudi

எனவே உலக முஸ்லிம்களுடைய உள்ளங்களை துன்புறுத்தக் கூடிய, நோவினை ஏற்படுத்தக் கூடிய அவர் பாவித்த அந்த வார்த்தையை, மனிதநேயத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மன்னித்தாலும் கூட, இது சவுதி அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தண்டனை என்ற அடிப்படையில் அவருக்கு மன்னித்து மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பத்தை சவுதி அரசாங்கம் தான் நிச்சயமாக வழங்க வேண்டும்.

எனவே நாங்கள் அந்த அடிப்படையில் சகல சமயத்தவர்களும் இந்த இடத்திலே ஒன்று கூடி, அவருடைய அந்த மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று சர்வமத அமைப்பின் சார்பாக சவுதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை உண்ணாவிரத போராட்டத்தில் காவல்துறையினரால் குழப்பம்!

திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை உண்ணாவிரத போராட்டத்தில் காவல்துறையினரால் குழப்பம்!

 

சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் 

அத்துடன் எமது நாட்டு அரசாங்கம் அவருடைய விடுதலைக்காக, தண்டனைக் குறைப்புக்காக தன்னாலான ராஜதந்திர பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது.

அதேபோன்று இந்த நாட்டு முஸ்லிம்கள் சார்பாகவும், பள்ளிவாசல் சமூகங்கள், அதேபோன்று அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் ஊடாகவும் இப்படியான பணிகளும் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம்.

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் : சர்வமத தலைவர்கள் கோரிக்கை | Sl Tamil Youth Anojan Sentenced To Death In Saudi

எனவே அந்த அடிப்படையில், மன்னார் மாவட்ட மக்கள் சார்பாகவும் நாங்கள் இந்த இடத்திலே மிக பணிவாக மீண்டும் ஒருமுறை சவுதி அரசாங்கத்திடம் நாங்கள் எங்களுடைய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம்.

அதேபோன்று எங்களுடைய நாட்டு அரசாங்கத்தினுடைய அந்த முயற்சிக்கும் ஒத்துழைப்பை வழங்குகின்றோம். மீண்டும் அவர் அந்த மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு வந்து சமய சகவாழ்வுக்கான தன்னுடைய பங்களிப்பை வழங்குவதற்கான மனமாற்றத்தை இறைவன் அவருக்கு வழங்க வேண்டும்.

எனவே அவருக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த இடத்திலே கேட்டு, அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

பாடசாலைப் பாடநூல் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைப் பாடநூல் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026